தமிழகம்

ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் மாணவர் தின விழா

169views
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் நடந்த சர்வதேச மாணவர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி இனளஞர் செஞ்சிலுவை சங்கம் (ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி) சார்பில் சர்வதேச மாணவர் தினம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜூனியர் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பேராசிரியர் மா.மலர்வண்ணன் வரவேற்றார். டாக்டர் ஆபஜெ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை நிறுவனர் ஏபிஜெ எம்ஜெ ஷேக் சலீம் சிறப்புரையாற்றினார். .
மாணவர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கி கவுரவித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் லெப்டினான்ட் மு. உத்திர செல்வம் நன்றி கூறினார். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!