தமிழகம்

பெரியகுளம் புதிய பஸ் நிலையம் மற்றும் மூன்றாந்தல் பகுதியில் உள்ள மதுபான பார்களை மூட வேண்டும், நெடுஞ்சாலை சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என தேனி மாவட்டம் ஆட்சியர் இடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு அளிக்கப் பட்டது.

108views
இன்று (05.12.2022) திங்கட்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் IAS அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத் தலைமையில் தேனி மாவட்டம் செயலாளர் முபாரக் அலி மாவட்ட நகர நிர்வாகிகள் யாசிக், முஜிபுர் ரஹ்மான், அஜ்மீர் காஜா, சிக்கந்தர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொது மக்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மது பான பாரையும், மூன்றாந்தல் பகுதியில் காந்தி சிலை அருகில் உள்ள மது பான தனியார் பாரையும் மூட வேண்டும் என கோரிக்கை மனு வழங்க பட்டது.  புதிய பஸ் நிலையம் மதுபான பாரை மூடி விட்டதாகவும் அது இனி திறக்க படாது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இடத்தில் கூறினார்.  மூன்றாந்தல் பகுதியில் உள்ள மதுபான பாரை மூட நடவடிக்கை எடுப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.

2 வது மனுவில் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டியில் உள்ள சுங்க சாவடி என்பது இன்னும் சாலைகளை முறைபடுத்தாமலும், இரு வழி சாலையாக உள்ள சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது மக்கள் மீது சிரமத்தை ஏற்படுத்துவது என்பதை மாவட்ட ஆட்சியர் இடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் எடுத்து கூறினார்கள்.  அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி பரிசீலனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்தார்.

மனு அளிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் காத்திருப்பது தெரிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இருந்த இடத்திற்கே வந்து மனுக்களை பெற்று கொண்டது  நெகழ்ச்சியாக இருந்தது.
பெரிய குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மது பான பாரை மூட நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மூன்றாந்தல் பகுதியில் உள்ள பாரையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!