தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்ட வருகையை முன்னிட்டு விழா முன்னேற்பாடு தொடர்பான முக்கிய ஆய்வுக்கூட்டம்

146views
தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு விழா முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 03.12.2022 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு முதன் முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 08.12.2022 அன்று வருகை தர உள்ளார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி இம்மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். எனவே இவ்விழா சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் தனிக்கவனம் செலுத்தி ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ். எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!