சினிமா

சீசா ஆடியோ வெளியீட்டு விழாவில்..

35views
நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில், “நண்பன் ஆனந்துக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், நான் இந்த படத்தில் நடிக்க அவர் தான் காரணம். எனக்கு போலீஸ் வேடம் வந்தால் தவிர்த்து விடுவேன். எதாவது சிறிய வேடமாக இருந்தால் கூட பண்ணுகிறேன், போலீஸ் வேடம் மட்டும் பண்ண மாட்டேன், என்று சொல்லி விடுவேன். அப்படிப்பட்ட நான் போலீஸ் வேடத்தில் நடிக்க நட்டி சார் தான் காரணம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும், என்று சொன்ன உடன் நான் சம்மதித்து விட்டேன். அவருடன் படம் முழுவதும் வருகிறேன், அவர் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததோடு, நிறைய இடம் கொடுத்தார், அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஒப்பந்தமான போது, எனக்கு கொஞ்சம் தொப்பை இருந்தது. அதனால் தயாரிப்பாளர் சற்று தயங்கியதாக நண்பர் சொன்னார்.படப்பிடிப்பு தொடங்க ஆறு நாட்கள் மட்டுமே இருந்தது. அந்த ஆறு நாட்களில், கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தேன். படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் என்னையும், எனது நடிப்பையும் பார்த்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திருப்தியாகி விட்டார்கள், என்று சொன்னார்கள். இது அனைத்து நடிகர்களும் செய்வது தான் என்றாலும், இந்த படத்தில் நட்டி சாருடன் நடிக்க போகிறோம் என்பதால், எந்த விதத்திலும் இந்த படத்தை கைவிட்டு விடக்கூடாது, என்று நினைத்தேன். அதனால் தான் அந்த அளவுக்கு கடுமையாக உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தேன். குணா சார் எனக்கு ஃபேஸ்புக் மூலம் நட்பானவர். சுகுணா மேடம் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. மிக சிறப்பான தயாரிப்பாளர், அவர்கள் மனதுக்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். இந்த படக்குழு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணித்தது. என்னுடன் நடித்த நிஷாந்த் ரூசோவுக்கு நன்றி. இங்கு மேடையில் இருக்கும் ஜாம்பவான்கள் எனக்கு கொடுக்கும் நம்பிக்கையால் தான் இப்போதும் சினிமாவில் உற்சாகமாக பயணிக்கிறேன். ஒரு நடிகனாக எனக்கு இன்னும் பெரிய பெரிய மேடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சீசா மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!