சினிமாவிமர்சனம்

இன்பினிட்டி – முடிவில்லாமல் அலையும் துப்பறியும் கதை.

40views
திரை விமர்சனம் :
இன்பினிட்டி – ஏதோ ஆங்கில பெயரில் தலைப்பு வைத்துவிட்டு,  தமிழ் பெயரில் கதாப்பாத்திரங்களின்  பெயர்களை உலவ விட்டு  நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கும்  தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பு.
மென்பனி – தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்.  எவ்வி இளவளவன் – சிபிஐ  அதிகாரி பெயர்.  ஆதவன், தமிழினி, நந்தினி – இப்படி வழியெங்கும் தமிழ் பெயர்கள்.  பெயர்களில் காட்டிய  அக்கறையை  படக்குழுவினர் கொஞ்சம் கதைப்பக்கமும்,  திரைக்கதை பக்கமும் திருப்பி இருக்கலாம்.

இளம் குழந்தைகளின் உடலில் சுரக்கும் ஒருவித திரவத்தை வெளிநாடுகளுக்கு கடத்தும் மெடிக்கல் மாஃபியா , அதனால் செய்யப்படும்  கொலைகள், துப்பறிய வரும் சிபிஐ அதிகாரி,  யாரும் எதிர்பாராமல் துப்பாக்கிப்பிடித்து வில்லத்தனம் காட்டும் பெண் மருத்துவர் – இப்படி கொஞ்சமும் அடித்தளம் இல்லாத கதை.   இதுவே இந்த படத்தின் ஒட்டுமொத்த பலவீனத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு, பாசில் படத்தொகுப்பு, பாலசுப்ரமணியன் இசை என தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிதாக கதைக்கு பொருந்தாமல்  இருக்கிறார்கள்.
நட்டியின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. வித்யா பிரதீப்பின் வில்லத்தனம் காட்டும் முகம் நமட்டு சிரிப்பை உதடுத்துக்கு கீழே கொண்டு வந்து சேர்க்கிறது.

தங்கையின் அதீத பாலுணர்வு வேட்கையில் வெறுப்படைத்த அண்ணன் அவளை கொலை செய்ய முனைவது கதையின் அடித்தளத்திக்கு சம்பந்தமில்லமால் துருத்துக்  கொண்டு அப்பட்டமாக தெரிகிறது.
சாய் கார்த்திக்கின் இயக்கம் அடுத்த பாகத்தில் வெளிப்படுத்தப்படலாம் என நம்புவோம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!