134views
மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளை ஆற்றங்கரையில் பசும்பொன் நகர் முதல் மேட்டுமடை செல்லும் குறுக்கு சாலை வரை போடப்பட்ட மோசமான சாலையால் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வாகன கடும்.அவதிப்பட்டு வருகின்றனர். சுமார் 10 இடங்களுக்கு மேல் ஆளை விழுங்கும் பள்ளங்கள் அதிகம் காணப்படுகிறது.

பகலில் செல்ல முடியாத நிலையில் வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இரவில் செல்லும் விவசாயிகள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். சுமார் 22 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆட்சியில் போடப்பட்டுள்ள சாலை தரமற்றதாக உள்ளது.
வெறும் மணல்மேடுகளால் சாலை போட்டதால் தற்போது பெய்த கனமழையின் காரணமாக முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டு விட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து தகுந்த மூலப்பொருட்கள் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும். சோழவந்தான் ரயில்வே பால பணிகள் நடப்பதால் அதிகபட்ச வாகனங்கள் இந்த முள்ளை ஆற்றங்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.






