தமிழகம்

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம் – எஸ்.பி.க்கு கமிஷன் நோட்டீஸ்

83views
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள அரசினர் இளம் சிறுவர் பாதுகாவல் இல்லத்திலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதுகாவலர்களை தாக்கிவிட்டு 6 பேர் தப்பி ஓடினர். இன்று 29-ம் தேதி வரை இன்னும் பிடிபடவில்லை.  இந்த நிலையில் மீண்டும் இந்த இல்லத்தில் நேற்று 28-ம் தேதி மத்தியம் தாங்களை வார்டன் அனுமதிக்கவில்லை என்று கூறி அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து பாதுகாப்பு கண்காணிப்பாளர் விஜயகுமார், வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகாரின் 12 சிறுவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.  மேலும் தப்பி ஓடிய 6 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூரில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் பாதுகாவலர்களை தாக்கிவிட்டு 6 சிறுவர்கள் தப்பியது தொடர்பாக பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் தன்னிச்சையாக வழக்குபதிவு செய்த, கமிஷன் உறுப்பினர் டாக்டர் ஆனந்த், விசாரிக்க உத்தரவிட்டதன் பேரில், கமிஷன் பதிவாளர் அனு சவுத்ரி வழக்குபதிவு செய்து 3 நாட்களுக்குள் கமிஷனிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, வேலூர் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணனுக்கு, பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!