தமிழகம்

மதுரை சீடு மற்றும் சேவாலயத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா

54views
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹரிபாபு அவர்கள் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்காக தமிழோடு விளையாடு என்று தலைப்பில் தமிழில் வார்த்தை விளையாட்டுக்கள் கற்று மாணவர்களை தூய தமிழில் பேச வைத்தார் முனைவர் வடிவேல் அவர்கள் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக கலையோடு விளையாடு என்ற தலைப்பில் நாடகம் நடிப்பு பற்றியும் மாணவர்களை நடிக்க வைக்கவும் செய்தார்.

7, 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு “அறிவியலோடு விளையாடு” அமர்வை கல்வி செயல்பாட்டாளர் சத்யமாணிக்கம் நடத்தினார்.,சிறிய விளையாட்டுக்களை கொண்டு அறிவியல் செய்திகளை எளிமையாக பகிர்ந்து கொண்டார்.
நம் கண்கள், ஒளி, காற்றழுத்தம் செய்யும் விந்தையான செயல்களை மாயத்தோற்றங்களை சிறிய காகிதங்கள் கொண்டு எளிமையாக விளக்கினார். மாணவர்களை பேச வைத்து, கேள்விகள் கேட்டு, கேள்விகள் கேட்க வைத்து, பதில்களை யோசிக்க தூண்டி அமர்வை வழிநடத்தினார்.,
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஒளி ஆண்டு, செயற்கை கோள்கள் பற்றி புரியும் படி விளக்கினார். நம் அன்றாடம் அறிவியலால் நிரம்பியுள்ளது, மேம்பட்டுள்ளது.

எதையும் உற்று நோக்கும் திறனையும், கேள்வி கேட்கும் திறனையும் வளர்த்துக் கொண்டால் அறிவியல் நமக்கு பிடித்த பாடமாகி விடும். அமர்வை முடிக்க விட மாட்டேன் என்று விட்டார்கள், கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள் மாணவர்கள்.

இறுதியாக சேவாலயம் காப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் நன்றியுரை கூறினார்..
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!