தமிழகம்

திருமங்கலம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூபாய் 1.5 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் தலை மறைவு – பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை- 50க்கும் மேற்பட்ட பெண்கள் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.

169views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சேது பாண்டி – யின் மனைவி போதுமணி, அப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டும்,குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி வெளியில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்தும், ரூ 1.5 கோடிக்கு மேல் மோசடி செய்து, கடந்த மூன்று மாத காலமாக தலைமுறைவாகியுள்ளார்.
தலைமறைவாகியுள்ள பெண்ணின் மீது மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் , பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு,பணத்தை இழந்தவர்களுக்கு பணம் பெற்று தரக்கோரி தெரிவித்தனர்.

 

பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை ஏலச் சீட்டு பணத்தை செலுத்தி வந்துள்ளனர். சீட்டு காலம் முடிவடைந்த பின், பணத்தை கேட்டு பலமுறை அவரது வீட்டில் சென்று பார்த்தபோது, அவர் தலைமுறைவாகியுள்ளதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .மேலும் போதுமணியிடம் கிராமத்தைச் சார்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் குறைந்த வட்டிக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.அப்பணத்தை பெற்றுக் கொண்ட , போதுமணி வெளியில் அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து சுயலாபம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  அப்பெண்ணின் கணவரும் , குழந்தைகளும் வீட்டில் இருப்பதால் , அவர்கள் இதுகுறித்து எங்களுக்கு சம்மந்தம் இல்லை எனக்கூறி நழுவி விட்டதால், செய்வதறியாது பாதிக்கப்பட்டவர்கள், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, திகைத்து நிற்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!