கிரிக்கெட்டில் பிரகாசிக்க கடின உழைப்பு தேவை: நடராஜன்
இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கலாம்,’ என இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணி வேக பந்து வீரர் நடராஜன் பேசியபோது, "ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய போது, ஊர் மக்கள் திரண்டு அளித்த வரவேற்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவில்...