விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்: வில்வித்தை ஆடவர் காலிறுதியில் இந்தியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வில்வித்தை அணி தோல்வியை தழுவியது. வில்வித்தை பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் அதானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கொரியாவின் கிம் ஜே டியோக், ஜின் யெக், கிம் வோஜின் அணியை எதிர்கொண்டது.இதில் 6-0 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. முன்னதாக கஜகஸ்தான் அணியை திறம்பட வீழ்த்தி காலிறுத்திக்கு தகுதிப்பெற்ற இந்தியா, கொரியாவின்...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி...டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் சிந்து 21-க்கு 7, 21-க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்....
செய்திகள்விளையாட்டு

25 ஆண்டுகளுக்குப்பின்: ஒலிம்பிக் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் வெற்றி: சூப்பர் சுமித்!

ஒலிம்பிக் போட்டியில் 25 ஆண்டுகளுக்குப்பின் டென்னிஸ் ஆடவர் பிரிவில் முதல் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. டோக்கியோவில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீர்ர டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நகல் முத்திரை பதித்துள்ளார். ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒட்டுமொத்தமாக இந்திய வீரர்கள் பெறும் 3-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன், கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்திய...
செய்திகள்விளையாட்டு

அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் உத்வேகம்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய்க்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான பளுதூக்கும் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ...
செய்திகள்விளையாட்டு

இன்று தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: ரசிகர்களுக்கு அனுமதியில்லை

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றன. டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ஒலிம்பிக் தொடர் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநிலைதான் தொடக்க விழாவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. குறைந்த அளவில்...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் மேரிகோம், மன்பிரீத் சிங்

ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்-வீராங்கனைகள், நிர்வாகிகள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏந்திச் செல்லவுள்ளனர். இவர்களுடன் குத்துச்சண்டை வீரர்களான சதிஷ் குமார், ஆஷிஷ் குமார், மணிஷ் கவுஷிக், அமித் பங்கல், வீராங்கனைகள் பூஜா ராணி,...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்: வில்வித்தை தரவரிசையில் 9-ஆவது இடத்தை பிடித்தார் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசையில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 ஆவது இடத்தை பிடித்தார். ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும் தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வில்வித்தைப் போட்டிக்கான தகுதிநிலை சுற்று அதிகாலை ஐந்தரை மணிக்கு தொடங்கியது. இதில் தனிநபருக்கான மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்றார். இதில் முதல் மூன்று இடத்தை கொரிய...
செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணி – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு…!

இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட்...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் ரத்து இல்லை: நாளை டோக்கியோவில் திருவிழாக்கோலம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் வீரர்கள் வீராங்கனைகள் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து இல்லை என்றும் நாளை திட்டமிட்டபடி ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை...
செய்திகள்விளையாட்டு

வில்வித்தையில் முதல் ஒலிம்பிக் பதக்கம்: தீபிகாவுக்கு சவால்

ஒலிம்பிக் பதக்கம் என்னும் இலக்கை நோக்கி அம்பை எய்வாரா வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இந்திய விளையாட்டரங்கில் உருவான தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவா் தீபிகா குமாரி. ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சோந்த எளிமையான குடும்பத்தைச் சோந்த தீபிகா குமாரியின் தந்தை ஆட்டோ ரிக்ஷா டிரைவா். தாய் நா்ஸாக பணிபுரிந்தாா்,. சிறு வயதில் வீட்டருகே உள்ள மாந்தோட்டத்தில் கற்களை அம்புகள் போல் பயன்படுத்தி மாங்காய்களை பறிப்பதில் வல்லவராகத்...
1 56 57 58 59 60 74
Page 58 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!