விளையாட்டு

விளையாட்டு

மொயீன் அலி விசா கிளியர்- விரைவில் சிஎஸ்கேவுடன் இணைகிறார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கான நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது, அவர் இப்போது வியாழக்கிழமை அணியில் சேரத் தயாராகிவிட்டார். ஊடக அறிக்கைகளின்படி, 34 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இந்தியா செல்வதற்கான விசா ஆவணங்களைப் பெற்றுள்ளார் என்பதை சிஎஸ்கே மற்றும் மொயின் அலியின் குடும்பத்தினர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் நேற்று தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு இந்தியா வரத் தயாராகிவிட்டார்" என்று மொயீன் அலியின் தந்தை முனீர்...
விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த், பிரனாய் வெற்றி

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் கிறிஸ்டோபர் சென்னுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-16, 21-17 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் பிரனாய், சக நாட்டு வீரரான சாய் பிரனீத்துடன் மோதினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 25-23, 21-16 என்ற நேர்...
விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வெற்றி- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வங்காளதேச அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்  வங்காளதேச அணியும்,  2வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்  செய்தது . தொடக்கம் முதலே வங்காளதேச அணி...
விளையாட்டு

25 வயதில் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறும் ஆஷ்லி பார்ட்டி; கண்ணீர் மல்க அறிவிப்பு! காரணம் என்ன?

டென்னிஸ் உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆஷ்லி பார்ட்டிக்கு வயது 25. மிக இள வயதிலேயே அவர் தன்னுடைய கரியரில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது. ஆஷ்லி பார்ட்டியின் விளையாட்டு வாழ்க்கை இப்படியான எதிர்பாராத தருணங்களால் நிறைந்ததுதான். 2011 விம்பிள்டன் ஜூனியர் பட்டம் பெறுகிற ஆஷ்லி, தான் டென்னிஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்த போது அவர் 18 வயது பிரிவில் விளையாட...
விளையாட்டு

பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மாற்றுத்திறன் மாணவிக்கு மதுரை மேயர் வாழ்த்து

பிரேசிலில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மாநகராட்சி பள்ளி மாணவிக்கு மேயர் வ.இந்திராணி வாழ்த்து தெரிவித்தார். மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் வில்லாபுரத்தைச்சேர்ந்த ஜெ.ஜெர்லின் அனிகா என்ற மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் மாற்றுத் திற னாளி ஆவார். இவர் சீனா தைபேயில் 2019-ம் ஆண்டு சிறப்புப் பிரிவினருக்கான 2-வது உலக இறகுப் பந்தாட்டம் (பாட்மிண்டன்) சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கப்...
விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: மே.இ. தீவுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு நன்மை செய்த பாகிஸ்தான் அணி

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியதால் இந்தியாவுக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டம் மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மே.இ. தீவுகள் அணி மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது....
விளையாட்டு

வலிக்கு மத்தியிலும் போராட்டம் – ரஃபேல் நடாலை வீழ்த்திய 24 வயது சாம்பியன்!

ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இண்டியன்வெல்ஸ் ஓபன் சாம்பியன் ஆகியுள்ளார் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ். உலகத் தரவரிசையில் நான்காம் இடம், தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி, 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் என பார்மின் உச்சத்தில் இருந்து வருகிறார் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால். இதனால், அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸில் நடந்து வரும் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரிலும் அவரே பட்டம் வெல்வார்...
விளையாட்டு

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரபெல் நடால்

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த  கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-0), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை போராடி வீழ்த்தி அரையிறுதியை எட்டினார். இந்த நிலையில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் அவர் சக...
விளையாட்டு

ஆசிய கோப்பை 2022: தொடருக்கான தேதி வெளியீடு!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தொடர், கரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்தாண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு இலங்கை தான் தொடரை நடத்தும் உரிமையை பெற்றிருந்தது. தள்ளிப்போன போதும், மீண்டும் இலங்கை தான் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான உரிமையை பெற்றிருந்த பாகிஸ்தான் அடுத்தாண்டு ஆசியக்கோப்பையை தொகுத்து வழங்கவுள்ளது. இந்த போட்டிகளுக்கான ஆலோசனைக்கூட்டம்...
விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் லீக்: வங்கதேசத்தை வீழ்த்தி மே.இ.தீவுகள் வெற்றி

ஆறு பந்துகளில் 8 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கடைசி விக்கெட்டை இழந்து வங்காளதேசம் 4 ரன்களில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 17-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே அடிக்க முடிந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஷெமைன்...
1 12 13 14 15 16 74
Page 14 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!