தமிழகம்

தமிழகம்

வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 125 தொகுதிகளில் திமுக மட்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. அது இல்லாமல் காங்கிரஸ் 18 தொகுதிகள், மதிமுக 4, விசிக, இடதுசாரிகள் தலா 2 இடங்கள், பிற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி வாகை சூடி திமுவுக்கு பலம் சேர்த்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை வீழ்த்தியுள்ளார். கொளத்தூர் கொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றிச் சான்றிதழை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை வெற்றி பெறச் செய்த மக்கள் அனைவருக்கும் நன்றி...
தமிழகம்

18+ க்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படாது! – சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு!

இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி கிடைக்காததால் இந்த திட்டத்தை இன்று தொடங்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நாடெங்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் 1.33 கோடி பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்திற்கு இதற்கான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படாததால் 18-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கம்போல தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

அதிவேகமாக பரவும் கொரோனா. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை. நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 118 பேர் பலியாகினர். இவ்வாறு பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தவுடன் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால்...
தமிழகம்

மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடா? – இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதி!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் படுக்கைகள் முக்கால் சதவீதம் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காக்க வைக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேசான பாதிப்புகள் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவையும் தனியார் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க...
தமிழகம்

கொரோனா நோயாளிகள் 3,500 பேர் தமிழகத்தில் ஊடுருவல்!?

கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 3,500 பேர் மாயமான நிலையில் அவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை மிகக்கடுமையாக உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொற்றுப் பரவல் மிக வேகமாக இருப்பதால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டவர்கள் தான் தற்போது தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 3500 பேர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் தங்களது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் கர்நாடகா சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர் இந்நிலையில் அவர்கள் கக்க நல்லா சோதனைச் சாவடி வழியே நீலகிரி...
தமிழகம்

தேர்தல் நடத்தும் அலுவலரை ரகசியமாக சந்தித்ததாக அமைச்சர் மீது திமுக வேட்பாளர் புகார்

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ரகசியமாக சந்தித்ததாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப.கமலக்கண்ணனை, அவரது அலுவலகத்தில் ஏப்.26-ம் தேதி தனியாக சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியுள்ளார். அங்கு தான் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அலுவலக ஊழியர்கள் யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளேன். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை...
தமிழகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆலோசனை மேற்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்த ஆளுநர், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும்...
தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்கிய கோவை இளம் தம்பதியின் மனித நேயம்…

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க இளம்தம்பதியினர். இது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, பல மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில், ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதுமான காற்று வசதி கிடைக்கவில்லை. போதுமான அளவிலான பேஃன் இல்லாததால், கடுமையான புளுக்கத்தில் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அம்மருத்துவமனையின் மருத்துவர், ஒருவர் இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டுக்கு மின்விசிறி தேவைப்படுவதாக எப்.எம்.ரெடியோவில் கோரிக்கை வைத்திருந்தார். இதை கேட்ட, கோவை தம்பதி, தங்களது நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகள் வாங்கிக்கொடுத்து அசத்தி உள்ளனர்.அவர்களின் மனிதநேயம், அங்குள்ள...
தமிழகம்

ஜவ்வாதுமலை அருகே பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் உள்ளதாக செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, 'தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக் கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது. முற்காலத்தில் உயிரிழந்தவர் களை புதைக்க, பல வடிவ கற்களை அடுக்கி கல்லறை அமைத்தனர். மேலும், குழுத் தலைவர் அல்லது சிற்றரசன் உயிரிழந்தால், அவர்களை புதைத்த குழியின் மீது குத்துக்கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. இந்த குத்துக்கல்லை யானைக் கட்டி கல் என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் சிற்றரசன் இருந்ததாகவும், குத்துக்கல்லில் யானை கட்டி வைத்திருந்ததாகவும்...
தமிழகம்

மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ள விவரம்: அனைவருக்கும் அன்பான வணக்கம்! ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக் கொள்கிறேன். மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலைப் பாருங்கள். வீட்டுக்குள்ளும்...
1 446 447 448 449 450 451
Page 448 of 451

Right Click & View Source is disabled.

error: Content is protected !!