தமிழகம்

தமிழகம்

புதிய கட்டுப்பாடுகள் 2021 : திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் படி, உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் நண்பகல்12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அறைகளிலேயே உணவு வழங்க வேண்டுமென்றும், உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் ஏற்கனவே 25 நபர்கள் கலந்து கொள்ள...
தமிழகம்

துரத்தும் கொரோனா: தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்; எவையெல்லாம் இயங்கும்?

கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மளிகை காய்கறி கடைகள், பால் ஆகியவை நண்பகல் 12 வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. பேருந்து சேவைகளுக்கு 50 சதவிகித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளும் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் அலுவலக பணிக்கு செல்பவர்கள் ஆகியோருக்கு அனுமதி இல்லை. தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகத்துறையினர், வங்கி...
தமிழகம்

“1212 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்” ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!

1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில் செவிலியர்களை பணி நிரந்தம் செய்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியை அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருக்கும் எங்கள் செவிலியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்மட்ட குழுவை அமைத்து முன் களப்பணியாளர்கள், செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கைக்கு நன்றி .  கழக தலைவர் @mkstalin அவர்கள், 1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ததை முன்னிட்டு, 'Tamil nadu MRB...
தமிழகம்

“செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்” – தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர்முன்களப் பணியாளர்களாகக் கருதப்படு வார்கள் என திமுகதலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மகத்தானமக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வைஏற் படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள்மேற்கொண்டு வரு கின்றன. அதற்காகஅயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத் தும் வெயிலிலும், பெருந்தொற் றிலும் உயிரைப் பணயம்வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணி யாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள் . செய்தித் தாள்கள் , காட்சி ஊடகங்கள் , ஒலி ஊடகங்கள் போன்றவற் றில் பணியாற்றி வருகின்ற தோழர் கள் அனைவருமே இந்த வரி சையில் அடங்குவார்கள் . முன் களப் பணியாளர்களுக்கான உரிமைகளும் , சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் ....
தமிழகம்

உடைத்தெறியப்பட்ட ‘அம்மா உணவகம்’ போர்டு: ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு

இன்று காலை சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தை மர்ம நபர்கள் சிலர் சூரையாடியதாக வெளி வந்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகம் போர்டை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் சிலர் கலைஞர் உணவகம் என பெயர்மாற்றம் இருப்பதாக அறிவித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து முக ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா சுப்பிரமணியம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் மேலும் உடைத்தெறிந்த போர்டை மீண்டும் அதே இடத்தில் மாட்டவும் அவர் ஏற்பாடு செய்தார். இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் ஆரம்பமாகும் கத்தரி வெயில்..!

தமிழகத்தில் இன்று முதல் மே 29 ஆம் தேதி வரை கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரமானது ஆரம்பமாகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திரம் என்று...
தமிழகம்

தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் காலமானார்

தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் சென்னையில் இன்று காலமானார். கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கோ.இளவழகன் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். பாவேந்தம், தேவநேயம், அப்பாத்துரையம், அண்ணாவின் படைப்புகள் என அனைத்தையும் நூலாக்கி தந்தப் பதிப்பாளர் தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் இளவழகன். தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரும் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்தவருமான இளவழகன் மறைவு செய்தி அறிந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.  ...
தமிழகம்

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சட்டப்பேரவை கட்சித்தலைவராக ஸ்டாலின் தேர்வாகிறார்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் முறைப்படி சட்டப்பேரவைத் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார், அதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். சட்டப்பேரவை தேர்தல் ஏப் 6 அன்று நடந்தது, மே 2 வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றது. திமுக 125 இடங்களைப்பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது உறுதியானது. நேற்று காலை பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிகழ்ச்சி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நடக்கும் எனத் தெரிவித்திருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரும்முன் முதலில் திமுக சார்பில் வெற்றிப்பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி சின்னத்தில்...
தமிழகம்

தமிழக தேர்தல் : 178 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியை சந்தித்தாலும்கூட, 178 இடங்களில் அவரது கட்சி வேட்பாளர்கள் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தில் திமுக அடுத்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக அமர இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது இடத்தை எந்தக் கட்சி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தலுக்கு முன்பே எல்லார் மத்தியிலும் எழுந்தது. இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியதால் 3-ஆவது இடத்தை அமமுக கூட்டணி பிடிக்குமா அல்லது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பிடிக்குமா என்று பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி அதிக இடங்களில் மூன்றாவது இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது. 175க்கும் அதிகமான இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது....
1 445 446 447 448 449 451
Page 447 of 451

Right Click & View Source is disabled.

error: Content is protected !!