தமிழகம்

செய்திகள்தமிழகம்

பாடகி கல்யாணி மேனன் காலமானார்

பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்யாணி மேனன். நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே... என்ற பாடலின் மூலம் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு காதலன், முத்து, அலைபாயுதே, பார்த்தாலே பரவசம், விண்ணைத் தாண்டி வருவாயா, 96 உள்பட பல படங்களில் பாடியுள்ளார். 80 வயதான கல்யாணி மேனன் முதுமை காரணமாக உடல்நல பிரச்னை ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடக்கிறது. கல்யாணி மேனன் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனின் தாயார். அவருக்கு கருணாகரன் மேனன் என்ற இன்னொரு மகனும் இருக்கிறார்....
செய்திகள்தமிழகம்

கோவையில் இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது உள்பட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா். கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோன பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மீன், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல்...
செய்திகள்தமிழகம்

அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார் கருணாநிதி – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

தமிழ்நாட்டில் முதன்முதலில், 1921-ம் ஆண்டு மேலவை என்று சொல்லப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், சட்டமன்ற அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் என இருபெரும் விழா நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார். விழாவில் அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் ஆளுநர்...
செய்திகள்தமிழகம்

“மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள்” : முதல்வர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலை பொதுமக்கள் உருவாக்கிவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாம் அலை ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார். அதில், கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனா என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் நோயாக இருப்பதால் அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை . முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது . முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது , கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது . தளர்வுகள் அறிவிக்கப்படும் போது லேசாகப் பரவத் தொடங்குகிறது . இதனைக் கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று...
செய்திகள்தமிழகம்

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சதாசிவம், துணைஆட்சியர் வீர் பிரதாப் சிங், நீர்வளஆதாரத் துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் (மேல் காவிரி வடிநில வட்டம், சேலம்) ஜெயகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்வாய் பாசனத்துக்கான தண்ணீரை சேலம் ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை...
செய்திகள்தமிழகம்

உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!!

ஹோட்டல்களில் கொரோனா விதிகளுக்கு எதிராக 50%க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2ஆவது அலை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவல் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரம் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை கடந்த ஞாயிறு அன்று முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்த நிலையில், நேற்று மாவட்டந்தோறும் ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த , வரும் 9 ஆம் தேதி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது . அண்டை மாநிலங்களிலும் , தமிழகத்தின் சில பகுதிகளிலும் , நோய்த் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில்...
செய்திகள்தமிழகம்

அதிரடி உத்தரவு! நாகை மாவட்டத்தில் கடற்கரைக்கு செல்லத் தடை!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கையா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள்அமலுக்கு வர உள்ளன. கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக சென்னையிலுள்ள உணவகங்கள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் இன்று முதல் வரும் வரும் 9 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகை , வேதாரண்யம் , கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திதி கொடுக்க பொதுமக்கள்...
செய்திகள்தமிழகம்

3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில், நடைபெற்ற, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, முன்களப் பணியாளர்கள் மற்றும் நலச்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொற்று அதிகரிக்கிறது என கூற முடியாது என்றார். 3-வது அலை வந்தாலும், எதிர்கொள்ளும் வகையில் கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாக கூறினார். முக கவசம் அணிவத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் பொறுப்பை உணர்ந்து முறையாக விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாநில எல்லைகளில் வருவாய்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, காவல்துறை இணைந்து பரிசோதனை மேற்கொண்ட பின்னரே பயணிகளை...
செய்திகள்தமிழகம்

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்யும் பணியை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார். கோட்டை, கொத்தளங்களுடன் உள்ள பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததைஅடுத்து, அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட மேலாய்வின்போது கருப்பு, ஊதா வண்ணவளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்றகண்ணாடி படிகம், குறியீடுகளுடன்கூடிய பானை ஓடுகள் கிடைத்தன. மேலும், தட்டு, கிண்ணம், கலயங்களின் உடைந்த பகுதிகள், உருக்கு உலையின் அடிமானங்கள், உலோகக் கழிவுகளும் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்தபச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருப்பு, இளமஞ்சள் வண்ணங்களில் மணிகள் கிடைத்தன. தொடர்ந்து, பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வு செய்யும் பணி...
செய்திகள்தமிழகம்

“தனியார் பள்ளிகள் இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்” : நீதிமன்றம் அதிரடி!!

நடப்புகல்வியாண்டில்தனியார் பள்ளிகள்  85 சதவீதகல்விகட்டணத்தைவசூலித்துக்கொள்ளசென்னைஉயர்நீதிமன்றம்அனுமதிவழங்கியுள்ளது. மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பு கல்வியாண்டில் தனியார்கள் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார் . 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 6 தவணைகளாக கட்டணத்தை வசூலிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . கட்டணம் செலுத்தாதை காரணம் காட்டி , மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கவோ , ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவோ தடை விதிக்க கூடாது என அறிவுறுத்திய நீதிபதி , கட்டணம் செலுத்தாத காரணத்தால் , மாணவர்களை நீக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை...
1 415 416 417 418 419 441
Page 417 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!