தமிழகம்

செய்திகள்தமிழகம்

கோடநாடு கொலை வழக்கில் சயானிடம் போலீஸார் மீண்டும் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளும் ஜாமீனில் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்குக்காக ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் அரசின் சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த 13-ம் தேதி இவ்வழக்கு விசாரணை வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். இந்நிலையில், சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த கோத்தகிரி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக...
செய்திகள்தமிழகம்

பிரபல தொகுப்பாளர் ஆனந்த் கண்ணன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் மியூசிக், SS மியூசிக் என தமிழில் மியூசிக் சேனல்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்தவரான இவர் 2001 முதல் 2011 வரை சென்னையில் தங்கியிருந்து டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். சன் மியூசிக் விஜேவாக இருந்தபோது இவரது தமிழ் உச்சரிப்பும், சிரித்த முகத்துடன் எல்லா நேயர்களையும் வரவேற்கும் தன்மையும் இவரை மிகவும் பிரபலமாக்கியது. தனக்கென தனி ரசிகர் படையையே கொண்டிருந்த ஆனந்த கண்ணன் பின்னர் சன் டிவியில் இருந்து விலகி ரேடியோக்களில் ஆர்ஜேவாகவும், சில டிவி சேனல்களில் பகுதி நேர விஜேவாகவும் பணியாற்றினார். மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர் ஆனந்த கண்ணன். இவரது மனைவி ராணியும் சிங்கப்பூரில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. 2011-ல் இருந்து மீண்டும் முழுமையாக சிங்கப்பூருக்குப்...
செய்திகள்தமிழகம்

ஐஆர்சிடிசி சார்பில் ஆக.29-ல் மதுரையில் இருந்து உலகின் உயரமான படேல் சிலைக்கு சுற்றுலா ரயில்: தமிழகத்தில் இருந்து முதல்முறையாக இயக்கப்படுகிறது

தமிழகத்தில் இருந்து முதல்முறையாக, குஜராத்தில் உள்ள உலகின் உயரமான படேல் சிலைக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதில் ஜெய்ப்பூர் கோட்டைகள், உதய்பூர் ஏரிகளைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள், சென்னையில் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. நீண்டநாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த மக்களும் வெளியூர்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, தேவைக்கு ஏற்ப, ஆன்மிக மற்றும் இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலங்களுக்கு மீண்டும் ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன. மக்களும் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தில் இருக்கும் உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் படேல் சிலையைக் காண, தமிழகத்தில் இருந்து முதல்முறையாக ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. ஜெய்ப்பூர்...
செய்திகள்தமிழகம்

பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரம்; நடிகை மீரா மிதுன் சிறையில் அடைப்பு: வீடியோவை வெளியிட உதவியதாக நண்பரும் கைது

பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, வீடியோவை வெளியிட உதவியதாக அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் வசிப்பவர் நடிகை மீரா மிதுன். மிஸ் தென் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உள்ளிட்ட அழகிப் பட்டங்களை வென்றவர். மேலும், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு, பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், நடிகை மீரா மிதுன் அண்மையில் யூ-டியூப்பில் பதிவிட்டிருந்த வீடியோவில், பட்டியல் இனத்தவர் குறித்தும், அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் குறித்தும் இழிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது....
செய்திகள்தமிழகம்

இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்

தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் வாகை சந்திரசேகர். 1991ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றவர் சந்திரசேகர். இவரை தற்போது தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும், தமிழக கலைகளை பாதுகாத்து வளர்க்கவும், தமிழக அரசின் திட்டங்களால் கலைஞர்கள் பலனடையச் செய்யவும், பல்வேறு கலை பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தவும் வாகை சந்திரசேகரை தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும்...
செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது....
செய்திகள்தமிழகம்

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானத்தின் மீது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2000-ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர்...
செய்திகள்தமிழகம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்..!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9-ம் தேதி மதுரை கே.கே. நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்...
செய்திகள்தமிழகம்

சென்னையில் 55 அடி உயரத்தில் 75-வது சுதந்திர தின நினைவு தூண்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்

சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் 75-வது சுதந்திர தின நினைவுத் தூணை, வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதையடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டது. அதையடுத்து டெண்டர் விடப்பட்டு, ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 3-ம் தேதி பணிகள் தொடங்கியது. முதல்வர் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. 'நினைவுத் தூணின் அடித்தளம் 10 அடி நீளத்திலும், 10 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 55 அடி உயரம் கொண்ட நினைவுத் தூணை...
செய்திகள்தமிழகம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் இன்று தாக்கல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். முன்னதாக, தொழில், வணிகத் துறையினர் உட்பட பல தரப்பினரின் கருத்துகளை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 11-ம் தேதி ஆலோசனை நடத்தி, பட்ஜெட்டை இறுதி செய்தார். முதல்முறையாக...
1 412 413 414 415 416 441
Page 414 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!