செய்திகள்

இந்தியா

குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி – குஜராத் முதல்வர்!

குஜராத் பருச்சில் உள்ள மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் முதல்வர் 4 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் குஜராத் பருச் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 70 பேர் சிகிச்சைக்காக இருந்த நான்கு மாடி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கிருந்த பல கொரோனா நோயாளிகள் புகை மற்றும் தீ காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 24...
தமிழகம்

18+ க்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படாது! – சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு!

இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி கிடைக்காததால் இந்த திட்டத்தை இன்று தொடங்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நாடெங்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் 1.33 கோடி பேர்...
தமிழகம்

அதிவேகமாக பரவும் கொரோனா. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை. நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 118 பேர் பலியாகினர். இவ்வாறு பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்கு...
வணிகம்

இந்துஸ்தான் யூனிலீவர் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,190 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல லக்ஸ், ரின் சோப்பு தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,190 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 44.8 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,512 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. 2021 மார்ச் காலாண்டில்...
உலகம்

நிலவுக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் காலமானார் – விஞ்ஞானிகள் அஞ்சலி

நிலவில் முதன்முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது யாவரும் அறிந்ததே. இவருடன் நிலவிற்கு பயணித்தவர்தான் மைக்கல் காலின். 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி  வீரர்களில்  நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு  சென்று  வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார். விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால்  நிலவில்...
உலகம்

அமெரிக்க கப்பலை நெருங்கி வந்த ஈரான் கப்பல் – துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கப்பட்டது

பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க போர் கப்பலுக்கு மிக நெருக்கமாக ஈரான் துணை இராணுவப் படையின் கப்பல் வந்ததையடுத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அமெரிக்க கப்பலுக்கு 200 அடி தூரத்தில் நெருங்கி வந்தமையினால் தமது கப்பலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்க படையினர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் துணை இராணுப் படையினர் நெருங்கி வரும்...
இந்தியா

மே 31 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு – மத்திய உள்துறை அமைச்சகம்!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 31 வரை செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், இவை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமாகவே புதிய தொற்றுகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது....
இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை குறைப்பு

கோவாக்சின் தடுப்பூசியின் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை ரூ. 400 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3.86 லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டு தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி 3 கட்டமாக மே...
தமிழகம்

மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடா? – இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதி!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில்...
தமிழகம்

கொரோனா நோயாளிகள் 3,500 பேர் தமிழகத்தில் ஊடுருவல்!?

கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 3,500 பேர் மாயமான நிலையில் அவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை மிகக்கடுமையாக உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொற்றுப் பரவல் மிக வேகமாக இருப்பதால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டவர்கள் தான் தற்போது...
1 574 575 576 577 578 583
Page 576 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!