செய்திகள்

இந்தியா

கொரோனா வேகமாக அதிகரிப்பதால் மே 31 வரை ஊரடங்கு!

கொரோனா தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிமானோர் அங்கு தினமும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக...
இந்தியா

டெல்லிக்கு கோவாக்சின் தரமுடியாது; பாரத் பயோடெக் கடிதத்தால் சிக்கல்

டெல்லி அரசாங்கம் கேட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசிகளைத் தரமுடியாது என பாரத் பயோடெக் நிறுவனம் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக் கடித விவரத்தை காணொலிப் பேட்டியொன்றில் வெளியிட்டார், அந்த மாநிலத்தின் துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா. கொரோனா முதல் அலையின்போது தொற்றுக்கு ஆளான சிசோடியாவே, கொரோனா பாதிப்பைக் கையாளும் சிறப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். டெல்லி ஒன்றியப் பிரதேச அரசாங்கத்தின் சார்பில், 1.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவுசெய்யப்பட்டது. அதற்காக சீரம் நிறுவனத்திடமிருந்து கோவிசீல்டு...
உலகம்

இஸ்ரேல் – பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்

ஜெருசலேமில் கடந்த ஒரு மாதமாக பதற்றம் நீடிக்கிறது இஸ்ரேலியர்களுக்கு பாலத்தீனியர்களுக்கும் இடையே இப்போது நடந்து வரும் சண்டைகள் இருதரப்புக்கும் இடையே தீர்க்கப்படாத பழைய சிக்கல்களின் தொடர்ச்சிதான். மத்திய கிழக்கில் இது ஆறாத காயம். அதனால்தான் நேருக்கு நேரான மோதல்களும், ராக்கெட் தாக்குதல்களும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றன. சமீப ஆண்டுகளாக சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இஸ்ரேலிய - பாலத்தீன விவகாரம் இடம்பெறவில்லை என்பதற்காக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள் இல்லை....
தமிழகம்

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை !!

கொரோனா ஒருபக்கம் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் மறுபக்கம் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கோடை வெயிலும் கொளுத்துவதால் மக்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக் கடலில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் அறிவிப்பில் , தென்கிழக்கு அரபிக் கடலில் 14 ஆம் தேதி ,...
தமிழகம்

பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் "காய்கறி,மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளலாம். ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று, அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம். தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு...
இந்தியா

ஆபத்தான நிலையில் இருப்போரை காப்பாற்ற கர்நாடகாவில் ஆக்ஸிஜன் பேருந்து அறிமுகம்

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்ற ஆக்ஸிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்...
இந்தியா

மிரட்டும் கொரோனா.. தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல் !!

கொரோனாவின் 2ஆவது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. றாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சம் என்ற அளவிலேயே ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனாவில் பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே.கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்...
வேலைவாய்ப்பு

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினம்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக முதுகலை நீட்...
இந்தியா

கொரோனாவை ஒழிக்க ருத்ராபிஷேக பூஜை. இணையத்தில் எழுந்த கேலி!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ருத்ராபிஷேக பூஜை நடத்தியது இணையத்தில் கேலியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி அதிகளவில் பாதிப்புகளையும் உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையின்மையே என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் பாஜக தலைவர்கள் கொரோனா பரவலை தடுக்க ஆக்கப்பூர்வமான பணிகள் எதையும் செய்யாமல் இருப்பதாக இணையத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்தவகையில்...
இந்தியா

நியமன எம்.எல்.ஏக்களால் ரெங்கசாமி அரசுக்கு ஆபத்தா? புதுவையில் பரபரப்பு

புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயேட்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி தற்போது ஆட்சி அமைத்துள்ள நிலையில் மூன்று நியமன எம்எல்ஏ மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் மூவருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி...
1 567 568 569 570 571 583
Page 569 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!