செய்திகள்

இந்தியா

கட்டுக்குள் வராத கரோனா: கேரளாவில் ஊரடங்கு வரும் 23-ம் தேதிவரை நீட்டிப்பு;4 மாவட்டங்களில் ‘ட்ரிப்பிள்’ லாக்டவுன்

கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அங்குநடைமுறையில் இருந்த ஊரடங்கு வரும் 23-ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8-ம் தேதி முதல் 16-ம் தேதிவரை கடுமையான விதிகளுடன் கூடிய ஊரடங்குபிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், கரோனா வைரஸ் பரவலில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறையவில்லை. இதையடுத்து, மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை கேரள அரசு...
தமிழகம்

தமிழகத்துக்கு ரயிலில் மேலும் 27.6 டன் ஆக்சிஜன் வந்தது!

தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க....
தமிழகம்

மாநிலங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு 1.91 கோடி கோவிட் தடுப்பூசி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்

மே 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு 1.91 கோடி டோஸ் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை தொடங்கப்பட்டு 118 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியை நெருங்கியுள்ளது. 17 கோடி...
சினிமாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ரஜினிகாந்த்

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதைத் தொடர்ந்து பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக அவரின் மகள் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிவா இயக்கத்தில்அண்ணாத்த படத்தில்நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று...
இந்தியா

சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவைக் கட்டுமான பணிகள் நிறுத்தம்: கரோனா அதிகாரிப்பால் முதல்வர் உத்தரவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப்பேரவைக் கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் ரத்து செய்யப்படுவதாகவும், மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களின் பணிகள் ஆகியவை கரோனா வைரஸ் பரவலால் நிறுத்தப்படுவதாகவும முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு புதிய மாளிகை, சட்டப்பேரவைக் கட்டிடம், முதல்வருக்கு இல்லம், அமைச்சர்கள், மூத்த உயர் அதிகாரிகளுக்கு இல்லங்கள் , நவா...
இந்தியா

கங்கையில் மிதந்த உடல்கள்: மத்திய அரசு, உ.பி., பிஹார் அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பிஹார், உத்தரப்பிரதேசத்தில் பாய்ந்தோடும் கங்கை ஆற்றில் சமீபத்தில் ஏராளமான சடலங்கள் மிதந்த சம்பவத்தையடுத்து, பிஹார், உத்தரப்பிரதேசம், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிைமகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. கடந்த வாரத்தில் பிஹாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கங்கை ஆற்றில் 70-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் மிகவும் மோசமான நிலையில் மிதந்தன. இது மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டம், உஜியார், குல்ஹாதியா,...
தமிழகம்

நெகிழ்ச்சி! மரணப்படுக்கையில் இருந்த தாய்க்காக பாட்டு பாடிய மகன்!!

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம்...
தமிழகம்

தமிழகத்தில் அதி கனமழை : குமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்; 98% சுத்தமானது என்று ஆட்சியர் சான்று

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது. முதற்கட்டமாக 4. 82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதால், ஸ்டெர்லை ஆலை தாமாகவே முன்வந்து, ஆக்சிஜன் தயாரிப்பதாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கே ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படும் என்ற உறுதியோடு...
தமிழகம்

அதிரடி! 8 வழிச்சாலை திட்டம் அனுமதிக்கப்படாது, விரைவில் 120 உழவர் சந்தைகள்!!

தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டம் அனுமதிக்கப்படாது என்றும், விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் சரியாக பாராமரிக்கப்படாத நிலையில் அவற்றை சரியாக பராமரிப்பதுடன் தமிழகத்தில்...
1 566 567 568 569 570 583
Page 568 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!