செய்திகள்

இந்தியா

தடுப்பூசி இலக்கை அடையும் கிராமங்களுக்கு 10 லட்சம் சிறப்பு நிதி – பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி இலக்கை முழுமையாக அடையும் கிராமங்களுக்கு 10 லட்ச ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாமை, படுக்கைகள் இல்லாமை மற்றும் கொரோனாவால் இறந்தவர்களை முறையாக நல்லடக்கம் செய்ய முடியாமல் ஆறுகளில் தூக்கி வீசுதல் போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் கொரோனாவை முழுமையாக ஒழிக்க தடுப்பூசி...
இந்தியா

புதுச்சேரிக்கு மத்திய அரசு அனுப்பிய 90-டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை: சுகாதாரத்துறை செயலர் தகவல்

90-டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்களை மத்திய அரசு புதுச்சேரிக்கு அனுப்பியுள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப் பதாவது: புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்காக நேற்று 420 ரெம்டெசிவிர் குப்பிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று...
இந்தியா

கேரள சட்டமன்ற கொறடா ஆகிறார் சைலஜா: பினரயி விஜயன் அதிரடி முடிவு!

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் சைலஜாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது சைலஜாவுக்கு கொறடா பதவியை கேரள முதல்வர் அளித்துள்ளார். சற்று முன் வெளியான தகவலின்படி கேரள மாநில சட்டமன்ற கொறடாவாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
தமிழகம்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம்’ – மனுக்கள் மீது வீடுவீடாக அதிகாரிகள் விசாரணை

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தை அறிவித்தார். இதன்படி மக்களிடம் மனுக்களைப் பெற்ற அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாட்களில் அம்மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றும் அறிவித்தார். தற்போது அவர் தமிழக முதல்வரானதை அடுத்து, தேனி மாவட்டத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வரு கிறது. கம்பம் பகுதிகளில் கோட் டாட்சியர் நா.சக்திவேல் தலை மையிலான...
தமிழகம்

சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை!!

சென்னை வியாசா்பாடியை சேர்ந்த 'வியாசை தோழா்கள்' எனும் அமைப்பைச் சோந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ சேவை செய்து வருகின்றனா். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தினமும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். அதே போல் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்வடசென்னை பகுதியில் 'வியாசை தோழா்கள்' என்ற அமைப்பின் மூலம் சட்டக் கல்லூரி மாணவா்கள்...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே...
இந்தியா

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் காலமானார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 'பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால், கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள்கிழமை) இரவு...
இந்தியா

கோவிட் கேர் செண்டர்களாகும் 16 கோவில்கள்: ஜெகன் மோகன் உத்தரவு!

ஆந்திராவில் உள்ள கோயில்களில் உள்ள மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாறுகின்றன என ஜெக்ன மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் தினசரி 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மே 31ஆம் தேதி வரை ஆந்திராவில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து...
இந்தியா

3 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர். கேரள அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசிகளை வாங்க கேரள அரசும் உலகளாவிய டெண்டர் அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான விளைவுகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் உலகளாவிய ஒப்பந்தத்தின் படி கொரோனா தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளது. தமிழக அரசு இதை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் இப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் தங்கள் மாநிலத்துக்காக 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்....
தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை,...
1 564 565 566 567 568 583
Page 566 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!