செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

கமலா ஹாரிஸ் பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணித்த தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் குவாத்தமாலாவுக்கு அரசுமுறைப் பயணமாக ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதியம் புறப்பட்டார். இந்நிலையில், அவர் சென்ற விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாஷிங்டனின் புறநகரில் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு மீண்டும் திரும்பிய விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது....
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்சை வீழ்த்தி ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் எலினா ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4 ,வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார் . இதில் முதல் இரண்டு செட்டையும் ரிபாகினா கைப்பற்றினார். 2 வது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி ரிபாகினா அசத்தினார். இறுதிக்கட்டத்தில்...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக முன்னணி வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரோஜர் பெடரர். 39 வயதான பெடரர் கடந்த சில வருடங்களாக காயம் காரணமாக தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரோஜர் பெடரர்...
இந்தியாசெய்திகள்

கலவகுண்டா அணை திறப்பு: பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திர வனப்பகுதியில் உள்ள கலவகுண்டா அணை திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து உள்ளது. இதைத்தொடா்ந்து, ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தின் எல்லையோர மலைப்பகுதியில் கலவகுண்டா அணை உள்ளது. இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கலவகுண்டா அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து தற்போது 1,000 கன அடி தண்ணீா்...
இந்தியாசெய்திகள்

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000! மத்திய அரசின் அதிரடி திட்டம்!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில், விவசாயிகள் கூடுதல் பயன் பெறும் வகையில் மற்றொரு திட்டத்தில் அவர்கள் இணையலாம். பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ்,...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொது தேர்வு ரத்து: ஆசிரியர் அமைப்புகள் வரவேற்பு

தமிழகத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆசிரியர் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு.தியாகராஜன்: தேர்வைக் காட்டிலும் மாணவர்களின் உயிர் முக்கியமானது என்ற அடிப் படையில் முதல்வர் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இதற்காக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும்...
செய்திகள்தமிழகம்

தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று முதல் அமல்.. கடைகள் திறப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு முடக்கம் அமலில் இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இன்று(ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. அதேவேளையில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அமைந்திருக்கும் அங்காடிகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி,...
செய்திகள்தமிழகம்

இன்றுமுதல் 279 மின்சார ரயில்கள் இயக்கம்: அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா பரவலைதடுக்கும் வகையில், மாநில அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே, சுகாதாரம், நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவன ஊழியர்கள், துறைமுகம், வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சில...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : என்னை வீழ்த்த வேண்டுமெனில் .. வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் – டேனில் மெட்வடேவ்.!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 3 வது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரரான டேனில் மெட்வடேவ், ரெய்லி ஓபல்காவை வீழ்த்தி 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, " களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் போட்டியை நான் சிறப்பாக உணர்கிறேன்....
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழுவை அனுப்பி வைக்கிறது இங்கிலாந்து

மனநல ஆலோசகர் குழு... இங்கிலாந்து சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் தள்ளிவைக்கப்பட்டதோடு, ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி...
1 549 550 551 552 553 583
Page 551 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!