செய்திகள்

செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் மகளிர் : செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டம் வென்றார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா எதிர்கொண்டார். முதல் செட்டை பார்பரா 6-1 என புள்ளிக் கணக்கில் எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பவ்லிசென்கோவா ஆதிக்கம் செலுத்தினார். 5-2 என முன்னிலையில் இருந்த போது, இடது தொடையில் ஏற்பட்ட வலிக்கு...
உலகம்உலகம்செய்திகள்

செவ்வாய் கிரக புகைப்படங்களை அனுப்பிய சீன ரோவர்

செவ்வாய் கிரகத்தின் பரப்பை விளக்கும் வகையில் சீனாவின் ரோவர் ஜுராங் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ள 3 படங்களில், செவ்வாய் கிரகத்தின் மண்பரப்புகள் இடம்பெற்றுள்ளன. ரோவர் இறங்கிய இடத்தில் இருந்து 33 அடி பயணித்து இந்தப் படங்களை எடுத்ததாகவும், செவ்வாய் கிரகம் குறித்த தங்களது முதல் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது....
உலகம்உலகம்செய்திகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது !

ஊடகத்துறையில் சாதனைகள் புரிபவர்களை அங்கீகரிக்கும் புலிட்சர் விருது இந்திய வம்சாவளி கொண்ட பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்களுக்கு, சீன கம்யூனிச அரசு கட்டாய கருத்தடை செய்வது குறித்தும், அங்கு தொழிலாளர் சட்டத்தை மீறி கூடுதல் நேரம் வேலை வாங்குவது குறித்தும், லண்டன் பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலன், தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மேகா ராஜகோபாலனின்...
இந்தியாசெய்திகள்

லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவைகள்.. கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றம்

லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவை அனைத்தும் கேரளாவின் பேப்பூர் துறைமுகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சரக்குகளை லட்சத்தீவு மக்களுக்கு அளித்து வந்த பேப்பூர் துறைக அதிகாரிகள் மங்களூரு துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். லட்சத்தீவுக்கு சரக்கு பரிமாற்ற சேவைக்காக ஆறு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பூகோளம் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் தனித்துவமான தீவுக்கூட்டம் தான் லட்சத் தீவு. மிகவும் மிருதுவான பவளத் தீவுக்கூட்டங்கள் உள்ள பகுதியாகும்....
இந்தியாசெய்திகள்

மருந்துகள் முதல் கருவிகள் வரை… கொரோனா சிகிச்சை செலவைக் குறைக்க ஜிஎஸ்டி சலுகைகள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள், கருவிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. உடலிலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் கொரோனா உள்ளதா என பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் RT-PCR டெஸ்ட் கிட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படும் என்றும் இன்று நடைபெற்ற 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சிகிச்சைக்கான...
இந்தியாசெய்திகள்

முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி – மத்திய அரசு எச்சரிக்கை…!

மத்திய அரசின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா,பிக் பாஸ்கெட்,டொமினோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தளங்களிலிருந்து,பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள்...
செய்திகள்தமிழகம்

முதல்வர் பயணத்தின் போது சாலையோரம் பெண் காவல் அதிகாரிகளை நிற்க வைக்க வேண்டாம் – டி.ஜி.பி உத்தரவு.!

முதல்வர் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் சமயத்தில், சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், தமிழக டி.ஜி.பி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக முதல்வர் அலுவல் ரீதியாக செல்கையில் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களில் பெண் காவல் அதிகாரிகள் இனி வரும் நாட்களில்...
செய்திகள்தமிழகம்

டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14-ம் தேதி) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை செயல்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாக தான் விற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தர 60,000 மருந்துகள் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார். கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் இதுவரை 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 வாரங்களில் மட்டும் கருப்பு பூஞ்சை பாதிப்பு 150 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6 வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.இதில் முதல் 2 செட்டில் சிட்சிபாஸ்6-3, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதைதொடர்ந்து அடுத்த 2 செட்டை ஸ்வெரேவ்...
1 543 544 545 546 547 583
Page 545 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!