செய்திகள்

இந்தியாசெய்திகள்

ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் ஏஜென்ட்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்கிடைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப ப் பெற வலியுறுத்தி உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக டெல்லி மாநில எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்...
செய்திகள்தமிழகம்

ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் செயல்களை பாஜக வேடிக்கை பார்க்காது: மாநில செயற்குழுவில் தீர்மானம்

இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடுவிளைவிக்கும் எந்த செயலையும் பாஜக வேடிக்கை பார்க்காது என்றுபாஜக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நேற்றுநடந்தது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள குழு உறுப்பினர்கள் ஆங்காங்கே இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவினர், மத்திய அரசு என்பதற்கு பதிலாக'ஒன்றிய...
செய்திகள்தமிழகம்

பெட்ரோல், டீசல் இன்றும் அதிரடி உயர்வு – தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரூ.100ஐ தாண்டி விற்பனை

கொரோனா லாக் டவுன் காலத்திலும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.19 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 93.23 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்...
செய்திகள்தமிழகம்

‘உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்’ – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டப்பேரவை தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலாயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட 9 மாவட்டங்களில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த...
செய்திகள்விளையாட்டு

2 ஆண்டுகள் 71 விக்கெட்டுகள்… அஸ்வினின் சாதனைப் பயணம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி அறிவித்த பின்பு இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் அதிகளவு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்தார் அஸ்வின். 2019-ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அறிவித்தது. இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும்...
செய்திகள்விளையாட்டு

முதல் டி20 ஆட்டம் இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு தலா 3 டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்த முதல் டி20 ஆட்டம் கார்டிப் நகரில் நடநத்து. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை 20ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 129ரன் எடுத்தது. அதிகபட்சமாக தசுன் ஷாங்கா 50ரன் எடுத்தார்....
உலகம்உலகம்செய்திகள்

அத்துமீறி நுழைந்த இங்கிலாந்து.. விரட்டியடித்த ரஷ்யா.. தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்..!!

கருங்கடலில் எல்லையை தாண்டி நுழைந்த இங்கிலாந்து போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது. இங்கிலாந்து ராயல் கடற்படையின் HMS defender என்னும் போர்க்கப்பல் ஜூன் 23ஆம் தேதி கருங்கடலில் இருக்கும் எல்லையை மீறியுள்ளது. இவ்வாறு மீறிய HMS defender போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது. அதாவது ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டினுடைய போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை கொண்டு இங்கிலாந்தின் HMS defender போர்க்கப்பலை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது....
உலகம்உலகம்செய்திகள்

ப்ளோரிடாவில் கட்டட விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 99 பேர் காணாவில்லை

ப்ளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று தடீரென இடிந்து விழுந்ததில் மூன்று உயிரிழந்துள்ளனர் மேலும் 99 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததுள்ளது. இடிபாடுகளுக்கு இடையெ மூன்று பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ப்ளோரிடா மாகாணத்தின் தீயணைப்பு மீட்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி.. அரசு அதிரடி அறிவிப்பு..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாடுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் சில நாடுகளின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து குறிப்பிட்ட அளவிலான விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கடுமையாக பரவிய காரணமாக நேபாளத்தில் சர்வதேச விமான...
இந்தியாசெய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 30 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி விநியோகம்

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 30 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் சார்பில் நேற்று...
1 531 532 533 534 535 583
Page 533 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!