செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

கியூபாவில் அதிபரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கியூபாவில் பொருளாதார நெருக்கடியை சரியாக கையாளாத அதிபரை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஹவானாவில் திரண்ட கியூபா மக்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சரிவு, உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனாவை கையாண்ட விதத்திலும் கம்யூனிஸ அரசு தோல்வியடைந்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டினர். கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபர் பைடன் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது....
உலகம்உலகம்செய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு ஜாக்கிசான் முடிவு

ஜாக்கிசானின் முடிவு... பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், பல நாடுகளுக்கு தாம் சென்ற போது சீனா அனைத்து வகையிலும் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது என்றார். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைவதாக கூறிய அவர், 5 நட்சத்திரங்களை உடைய நமது சீன சிவப்பு கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது...
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி… 41,000 பேர் மீண்டனர் – 624 பேர் மரணம்

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 41,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று 624 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. முதல் இரண்டு அலைகளில் 19 கோடி பேர் கொரோனாவால்...
இந்தியாசெய்திகள்

கேரள ஆளுநர் திடீர் உண்ணாவிரதம்., ஒன்று சேரும் பெண்கள்.!

வரதட்சணைக்கு எதிராக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. வரதட்சணைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பிற்காகவும் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கேரள மாநிலத்தில் வரதட்சணைக் கேட்டு, கொடுமைப்படுத்தி கொலை, கொடுமை தாங்காமல் தற்கொலை செய்யும் சம்பவங்கள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. அண்மையில், இதுபோன்ற 2 சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை...
செய்திகள்தமிழகம்

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன். நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கைக்கு, நீட் நுழைவுத் தோவு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோவை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக நீட் தோவில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் – மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என புதிய மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். வயது முக்கியமல்ல, மூத்த, இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். மற்ற கட்சிகள் தனிநபர் கட்சிகள், பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுமுயற்சிதான். வயது, அனுபவம் என பல்வேறு விஷயங்களைக் கொண்டு பாஜக பொறுப்பளித்து வருகிறது என்றும் பாஜக...
செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் இறுதிப்போட்டியில் புதிய மாற்றம்

விம்பிள்டன் வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் இறுதிப்போட்டியில் பெண் நடுவராக பணிப்புரிந்து உள்ளார். டென்னிஸ் தொடர்களில் பழமையானதும் உலகப் புகழ் பெற்ற விம்பிள்டன் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் கோலகலமாக நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான ஜோகோவிச், இத்தாலியை சேர்ந்த மாட்டியோ பெரெட்டினியை எதிர்த்து போட்டியிட்டார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் இரு வீரர்களும் கடுமையாக...
செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது: பெனால்டி முறையில் யூரோ கோப்பையை வென்ற இத்தாலி

யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் பெனால்டி முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி அணி. ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த யூரோ போட்டி, கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டுக்கு மாற்றப்பட்டது. தலைசிறந்த 24 நாடுகளின் அணிகள், பங்கேற்ற இப்போட்டி கடந்த ஜூன் 11-ம் தேதி 11 நகரங்களில் தொடங்கியது. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில்...
உலகம்உலகம்செய்திகள்

விண்வெளிக்குச் சென்ற ரிச்சா்ட் பிரான்ஸன் குழு! இந்திய வம்சாவளி பெண்ணும் பயணம்

அமெரிக்காவின் வா்ஜின் கலாக்டிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஓடத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளா் ரிச்சா்ட் பிரான்ஸன் உள்ளிட்ட 6 போ ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்குச் சென்றனா். அமெரிக்காவைச் சோந்த விண்வெளி சுற்றுலா நிறுவனம் வா்ஜின் கலாக்டிக். இந்த நிறுவனம் மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய 'ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி' என்ற விண்வெளி ஓடத்தை ஞாயிற்றுக்கிழமை விண்வெளியில் செலுத்தியது. அந்த ஓடத்தில் ரிச்சா்ட் பிரான்ஸன் (71), அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சோந்த ஸ்ரீஷா...
உலகம்உலகம்செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் இறக்கப்பட்டுள்ள புதிய ரோபோட்..!

செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதரங்களைத் திரட்டி வருகிறது..! செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள பள்ளத்தாக்குகளில் இந்த ரோபோட் தனது ஆய்வு பயணத்தை தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தற்போது, ரோவர் ஆராயப் போகும் பள்ளமானது பல பில்லியன் ஆண்டுகளுக்குமுன் பெரிய...
1 523 524 525 526 527 583
Page 525 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!