செய்திகள்

இந்தியாசெய்திகள்

அனில் அம்பானி செல்போனும் ஒட்டு கேட்கப்பட்டதா? நீளும் பட்டியலால் பரபரப்பு!

பெகாசஸ் செயலி மூலம் முக்கிய பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், திருமுருகன் காந்தி உள்பட பலரது செல் போன்கள் ஒட்டுக் கேட்டதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஸ்தம்பிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது...
இந்தியாசெய்திகள்

கனமழை வெள்ளம் எதிரொலி: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் 6000 பயணிகள் தவிப்பு!

கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ரயில்கள் ஆங்காங்கே நின்று சுமார் 6 ஆயிரம் பயணிகள் தவித்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தெலுங்கானா மாநிலம் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு...
செய்திகள்தமிழகம்

ஓ.பி.எஸ் வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அடைந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி, போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான மிலானி என்பவர், தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர...
செய்திகள்தமிழகம்

2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் விநியோகம்: 32 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து மருத்துவ பயன்பாட்டுக் கான ஆக்சிஜன் விநியோகம் 2,000 மெட்ரிக் டன் என்ற அளவை நேற்று கடந்தது. இதுவரை 2,006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் உச்சத் தில் இருந்தபோது மருத்துவ ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர...
செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணி – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு…!

இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட்...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் ரத்து இல்லை: நாளை டோக்கியோவில் திருவிழாக்கோலம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் வீரர்கள் வீராங்கனைகள் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து இல்லை என்றும் நாளை திட்டமிட்டபடி ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை...
உலகம்உலகம்செய்திகள்

சீனா சொந்தமாக தயாரித்த உலகிலேயே அதிவேகமாக செல்லும் ரயில் அறிமுகம்

அதிவேகமாக செல்லும் ரயில் அறிமுகம்...உலகிலேயே அதி வேகமாகச் செல்லும் ரயிலை சொந்தமாகத் தயாரித்து சீனா அறிமுகம் செய்துள்ளது. மின்காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. கடற்கரை நகரமான கிங்டாவ் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் உச்சபட்ச வேகத்தில் செல்லும் போது தண்டவாளத்தில் இருந்து மேலெழும்பி செல்லும் திறன் கொண்டது. தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய்...
உலகம்உலகம்செய்திகள்

40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து..! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து ஸ்கைவர்ட் விமானம் இன்று காலை புறப்பட்டு வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேராவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், சோமாலியா-கென்யா எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள எல்வாக்கில் உள்ள புராஹேச் இராணுவ தளத்தில் ஸ்கைவர்ட் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. அதையடுத்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை...
இந்தியாசெய்திகள்

பாஜக தலைமைக்கு எதிராக யாரும் போராட வேண்டாம்!: ஆதரவாளர்களுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா சூசகம்..!!

பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு எதிராக யாரும் போராட வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சூசகமாக கூறியிருப்பதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. கர்நாடக பாஜக-வில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனையால் முதலமைச்சர் எடியூரப்பா விரைவில் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது. லிங்காயத்து சமூக தலைவரான எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என்று அந்த சமுதாய மடாதிபதிகள்...
இந்தியாசெய்திகள்

இரண்டாவது நாளாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவு

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.24 மணிக்கு திடீரென...
1 518 519 520 521 522 584
Page 520 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!