செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

டேனிஷ் சித்திக்கி கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அமெரிக்க ஊடகம் செய்தி!

இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டது. நீண்டநாட்களாக அந்நாட்டின் ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் ஆட்சியின்போது, தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானுக்கு உதவும் வகையில் அந்நாட்டின் அமெரிக்க படையினர் குவிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அமெரிக்க பிரதமராக ஜோ பிடன் பதவியேற்றபோது, இந்தாண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து படைகளை வாபஸ் பெருவதாக அறிவிக்கப்பட்டு தற்போது விலகிவருகின்றனர்....
செய்திகள்விளையாட்டு

குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய மகளிர் குத்துச்சண்டைக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீராங்கனை லவ்லினை, சீனா தைபே வீராங்கனை நின் சின் சென்-ஐ எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முடிவில் 4-1 என்ற கணக்கில் நின் சின் சென்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா. லவ்லினை அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு...
இந்தியாசெய்திகள்

‘விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த அவகாசம் தாருங்கள்’ – நிதியமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

விவசாயிகள் பயிர்க் கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ளள அந்த கடிதத்தில், குறுகிய கால பயிர்களுக்காக விவசாயிகள் வாங்கியகடனை திருப்பி செலுத்துவதற்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த கடன்களுக்கான வட்டிகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்....
செய்திகள்தமிழகம்

நாட்டில் மீண்டும் உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 44,230 பேருக்கு தொற்று; 55 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில்,...
செய்திகள்தமிழகம்

2300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வெள்ளி நாணயம்: உறுதிப்படுத்தும் நாணயவியல் ஆய்வாளர்

பண்டைய கால தமிழர்கள், வடநாட்டு மௌரியர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கீழடியில் கிடைத்துள்ள வெள்ளி நாணயம் உறுதிப்படுத்துவதாக நாணயவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழடி அகழ்வாராய்ச்சியில் சமீபத்தில் வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இது கி.பி. 303 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த நாணயத்தின் முன்புறத்தில் கொம்புகளைக் கொண்ட எருதின் தலை, கதிர் இல்லா சூரியன், வால் சுருட்டிய நாய், ஆறு வகையான ஆயுத அமைப்பை கொண்ட...
செய்திகள்தமிழகம்

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தேர்வு நடைபெறாமல் இருந்தது. உச்சநீதிமன்றம் இதற்காக சிபிஎஸ்இ நிர்வாகம் மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திற்கு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தனர். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக முடிவினை எடுக்க அறிவுறுத்தி இருந்தனர். கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள்,...
செய்திகள்விளையாட்டு

ஜிம்னாஸ்டிக்ஸ்: சைமன் பைல்ஸ் விலகல்

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான சைமன் பைல்ஸ் "ஆல்-அரவுன்ட்' பிரிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தப் பிரிவில் அவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனாவார். தனது உளவியல் நலனில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அணிகள் பிரிவு இறுதிச்சுற்றிலும் ஒரேயொரு முயற்சியுடன் பைல்ஸ் விலகியிருந்தார். தற்போது ஆல்-அரவுன்ட் பிரிவில் சைமன் பைல்ஸின் இடத்தில் ஜேட் கேரி சேர்க்கப்பட்டுள்ளார்....
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா- குத்துச்சண்டை கால் இறுதி சுற்றில் பூஜா ராணி: வில்வித்தையில் தீபிகா குமாரி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான வில்வித்தையில் தீபிகா குமாரி 3-வது சுற்றில் நுழைந்தார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக்திருவிழாவின் 6-வது நாளான நேற்று, மகளிருக்கான மிடில்வெயிட் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜாரா ராணி 5-0 என்றகணக்கில் அல்ஜீரியாவின் இக்ராக்சைபை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை...
உலகம்உலகம்செய்திகள்

62 வயது மல்டி மில்லியனரை மணந்தார் இளவரசி டயானாவின் 30 வயது மருமகள்

மறைந்த இளவரசி டயானாவின் 30 வயது மருமகள், 62 வயது மல்டி மில்லியனரை மணந்தார் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சரின் 30 வயதான மகள் லேடி கிட்டி ஸ்பென்சர், 62 வயதான மல்டி மில்லியனர் மைக்கேல் லூயிஸை திருமணம் செய்து கொண்டார். ரோமில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் சனிக்கிழமை திருமண விழா நடைபெற்றது. அதன்பின்னர் அவர் தனது திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மற்றொரு...
உலகம்உலகம்செய்திகள்

இந்தியாவுக்கு சென்றால் 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை: சவூதி அரேபியா அறிவிப்பு

கரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான சவூதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் செல்வது, நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் சவூதி அரசின் வழிகாட்டுதல்களையும் மீறும் குற்றமாகும். எனவே, அண்மையில் கரோனா பரவல் அதிகரித்ததால்...
1 513 514 515 516 517 584
Page 515 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!