செய்திகள்

செய்திகள்தமிழகம்

கோவையில் இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது உள்பட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா். கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோன பரவலைக் கட்டுப்படுத்த...
செய்திகள்தமிழகம்

அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார் கருணாநிதி – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

தமிழ்நாட்டில் முதன்முதலில், 1921-ம் ஆண்டு மேலவை என்று சொல்லப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், சட்டமன்ற அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் என இருபெரும் விழா நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். தலைமை...
உலகம்உலகம்செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. தகவல் வெளியிட்ட புவியியல் ஆராய்ச்சி மையம்..!!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கதினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் பவிஸ்பே நகரிலிருந்து 26 கி.மீ தொலைவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் பூமிக்கடியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்....
உலகம்உலகம்செய்திகள்

சீனாவில் மீண்டும் கரோனா பரவுகிறது: 5 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அமல்

சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது. இதன் காரணமாக 5 மாகாணங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில்கரோனா பரவல் கண்டறியப்பட் டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன. சீனாவில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறிவந்த நிலையில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான்,...
செய்திகள்விளையாட்டு

டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து

டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து. டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில்...
செய்திகள்விளையாட்டு

டிஎன்பில்- சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் ட்ராகன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர்.கௌசிக் காந்தி 45 ரன்னும், ஜகதீசன் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சிறப்பாக தொடக்கம் கிடைத்தும் நடுவரிசை மற்றும்...
இந்தியாசெய்திகள்

சுற்றுலா தலங்களில் கூட்டம் கூட வேண்டாம்: எய்ம்ஸ் தலைவர் அறிவுரை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா நேற்று கூறியதாவது: இந்தியாவில் ஜைடஸ் கெடில்லா உள்ளிட்ட நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகள் விரைவில் அறிமுகமாக உள்ளன. இந்த நேரத்தில் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கரோனாவில் இருந்து மீள முடியும். இப்போதைய நிலையில் கரோனா அச்சுறுத்தல் ஓயவில்லை. இந்த சூழ்நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்....
இந்தியாசெய்திகள்

ஆந்திர அரசுக்கு ரூ.215 கோடி எஸ்பிஐ செலுத்த வேண்டும்: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேச அரசுக்கு எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி)ரூ.215 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவணைத் தொகை, கடன் தொகையை செலுத்துவதில் தாமதம் செய்யும் கடனாளிகளுக்கு வங்கிகள் அபராத வட்டி விதிப்பது வழக்கம். அபராத வட்டித் தொகைக்கு வங்கிகள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால், எஸ்பிஐ அபராத வட்டிக்கு ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசுக்கு எஸ்பிஐ ரூ.215.11 கோடி...
செய்திகள்தமிழகம்

“மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள்” : முதல்வர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலை பொதுமக்கள் உருவாக்கிவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாம் அலை ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார். அதில், கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனா என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் நோயாக இருப்பதால் அதை எவ்வளவு...
செய்திகள்தமிழகம்

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்...
1 510 511 512 513 514 584
Page 512 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!