செய்திகள்

செய்திகள்விளையாட்டு

மல்யுத்தம்: பதக்கத்தை உறுதி செய்தார் ரவி தாஹியா

மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். முன்னதாக தாஹியா தொடக்க சுற்றில் கொலம்பியாவின் டைக்ரரோஸ் அர்பனோவை 13-2 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தினார். அடுத்ததாக காலிறுதியில் பல்கேரியாவின் ஜியார்ஜி வாலென்டினோவ் வாங்கெலோவை 14-4 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் கஜகஸ்தானின் நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார் ரவி தாஹியா. கடைசி நேரத்தில் 2-9 என்ற கணக்கில்...
செய்திகள்விளையாட்டு

ஹாக்கி: போராடி வீழ்ந்தது இந்தியா

மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்த இந்திய மகளிர் அணி, அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் குர்ஜித் கெüர் 2-ஆவது நிமிஷத்திலும், ஆர்ஜென்டீனா தரப்பில் மரியா பாரியோனியுவோ 18, 36-ஆவது நிமிஷங்களிலும் பெனால்டி கார்னர்...
இந்தியாசெய்திகள்

முதல் முறையாக முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரான விமானம் தாங்கி கப்பல் சோதனை ஓட்டம்

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி கப்பலை தயாரிக்க மத்தியஅரசு கடந்த 2003-ம் ஆண்டு அனுமதிவழங்கியது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான இதன் கட்டுமானப் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது. 40 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தக் கப்பல் கட்டும் பணி கடந்த ஆண்டு...
இந்தியாசெய்திகள்

எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மிசோரம் – அசாம் அமைச்சர்கள் இன்று பேச்சு

எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக மிசோரம், அசாம் மாநில அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும் சுமார் 155 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இரு மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினையை தீர்க்க இரு மாநிலங்களும் கடந்த 1994-ம்ஆண்டு முதல் பல சுற்று பேச்சுவார்த்தையை நடத்தின. இருப்பினும், இதில் உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. அதன்பின் இரு மாநில...
செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் வரும் 7-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோவை, சேலம், மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 7, 8-ம் தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர் ,தென்காசி...
செய்திகள்தமிழகம்

சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு எனக் கூறி போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு: பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்

மோசடி நபர்கள் சிலர், சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவிமற்றும் சிலிண்டரின் எடை அழுத் தத்தைக் கண்டறிவதற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளை பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றுஎண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ரப்பர் குழாய் பரிசோதனை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பொருத்தப்பட்டுள்ள...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி

அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார். அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10...
செய்திகள்விளையாட்டு

தொடக்க டெஸ்ட் : இன்று முதல் களம் காண்கின்றன இந்தியா – இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த ஆட்டம், 2-ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான காலகட்டத்தின் முதல் ஆட்டமும் கூட. இங்கிலாந்து அணியை இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் சந்தித்த இந்தியா, அந்த டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது. ஆனாலும், இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை இதுவரை 18 தொடா்களில் சந்தித்து...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து ரூ.600 கோடிக்கு ‘ஹாா்பூன்’ ஏவுகணை கொள்முதல்

கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய திறன் கொண்ட 'ஹாா்பூன்' ஏவுகணையையும் அதன் உதிரி பாகங்களையும் சுமாா் ரூ.600 கோடி மதிப்பில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது. இது தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவுக்கு ஹாா்பூன் ஏவுகணை அமைப்பை விற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹாா்பூன் பராமரிப்பு அமைப்பு, ஏவுகணைக்கான உதிரி பாகங்கள், அதைப் பராமரிப்பதற்கான கருவிகள், ஏவுகணையைப் பரிசோதிப்பதற்கான கருவிகள், ஏவுகணையை எடுத்துச் செல்வதற்கான கருவிகள்...
உலகம்உலகம்செய்திகள்

வுஹான் நகரில் மீண்டும் கரோனா; ஒரு கோடி பேருக்கும் சோதனை நடத்தும் சீனா!

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்கு டெல்டா வகை கரோனாவே காரணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய வுஹானில், வெளிநாட்டிற்குச் செல்லாத, வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாத ஏழு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு பிறகு, வுஹானில் வெளிநாட்டிற்குச் செல்லாத, வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது...
1 508 509 510 511 512 584
Page 510 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!