செய்திகள்

தமிழகம்

வேலூரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் !!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் மாநகர, மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளர் ராமு, புறநகர் செயலாளர் வேலழகன், பொருளாளர் மூர்த்தி உள்ளிட் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

முதுகலை நீட் தேர்வை திடீரென ஒத்திவைத்து தேர்வு எழுதுபவர்களை பெரும் சிரமத்திற்கு உட்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. முறையற்ற நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்வதே அனைத்திற்குமான முழுமையான தீர்வு. நவாஸ் கனி எம்பி கண்டனம்.

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென அதனை ரத்து செய்து தேர்வு எழுதுபவர்களை கடும் சிரமத்திற்கு உட்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அடுத்தடுத்து வெளியானதை அடுத்து இந்த முடிவை ஒன்றிய அரசு எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திடீரென தேர்வை ரத்து செய்ததால் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வு நடக்கும் பகுதிகளுக்கு வந்த...
தமிழகம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வள்ளுவர் கோட்டத்தில் கள்ளக்குறிச்சியை மயான பூமி ஆக்கிய செயலற்று கிடக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இது வரையில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளகள், தொண்டர்கள் அனை வரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் கல்யாணமண்டபதில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று பாரதியஜனதாகட்சி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு. N.தனசேகர் தெரிவித்துள்ளார்....
தமிழகம்

தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற மரபை மீறி துவக்கத்திலேயே தனது ஜனநாயக விரோத போக்கை காட்டி இருக்கிறது பாஜக. நவாஸ்கனி எம்பி கண்டனம்

18 வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடிக்குண்ணில் சுரேஷ் அவர்களை தவிர்த்து, பாஜகவை சார்ந்த ஏழு முறை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பர்த்ருஹரி மஹ்தாப் அவர்களை நியமித்து நாடாளுமன்ற மரபை மீறி துவக்கத்திலேயே ஜனநாயக விரோத போக்கை கையில் எடுத்திருக்கும் பாஜக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிக முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த உறுப்பினரே தற்காலிக...
தமிழகம்

எல்.வி.பிரசாத் அவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவு நாள்

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர், நடிகர் எல்.வி.பிரசாத் அவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவு நாள். இந்நாளில் அவருக்கு மலர் மாலை அணிவித்து வணங்குகிறார், இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா. உடன் பத்திரிக்கையாளர்கள் ஜி. பாலன், ராஜ்ஜிகுமார், நம்பிராஜன் ஆகியோர் உள்ளனர்....
தமிழகம்

வேலூரில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து வேலூர் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகீம் உள்ள பலர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் பனிச்சமூட்டில் காருண்யா மருத்துவ கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்ற பத்தாவது சர்வதேச யோகா தினம்

கன்னியாகுமரி மாவட்டம் பனிச்சமூட்டில் காருண்யா மருத்துவ கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்ற பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ரெவரன்ட் பாதர் பி.மரிய சூசை வரவேற்புரை வழங்க மாவட்ட ஆயுஷ் மருத்துவ அதிகாரி மருத்துவர் ஜெ.ராபர்ட் சிங் முன்னிலை வகிக்க மருத்துவ பேராசிரியர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் காமன்வெல்த் சங்கத்தின் பொதுச்செயலாளர் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர் சமூக சேவகர் மரு.தி.கோ. நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி...
தமிழகம்

காட்பாடி சப்-ரிஜிஸ்தர் நித்தியானந்தம் வீட்டில் ரூ.14 லட்சம் ரொக்கம், 80 சவரன் நகை பறிமுதல் ! : வேலூர் விஜிலென்ஸ் அதிரடி !!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சப் - ரிஜிஸ்தர் ஆக பணிபுரிந்த நித்தியானந்தம் (பொ) பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதன் காரணத்தினால் கடந்த புதன்கிழமை இரவு காட்பாடி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள நித்தியானந்தம் வீட்டில் மண்ணில் புதைத்து வைத்தும், செடிகளின் மறைவிலும், வீட்டில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ.13 லட்சத்தது 75...
தமிழகம்

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! : ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோகா வகுப்பில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் ஈஷாவின் சார்பில் TNAU வில் நடைப்பெற்ற விழாவில் தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ஆர்.என்.ரவி பங்கேற்றார். நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக...
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயத்தை தடுக்க வாட்ஸ் எண்கள் ! காவல்துறை அறிவிப்பு !!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இறந்ததன் எதிரொலியாக வேலூர் மாவட்டத்திலும் வாட்ஸ்ஆப் எண்கள் : 6379958 321, 9087756223,8838608868 ஆகிய எண்களுக்கு வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்து உள்ளது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 27 28 29 30 31 583
Page 29 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!