செய்திகள்

தமிழகம்

நெகமம் பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் பணம் இருந்தால் மட்டுமே பத்திர பதிவு

கோவை மாவட்டம் நெகமம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக கலாவதி என்பவர் பணியாற்றி வருகிறார் .  இந்த அலுவலகத்தில் தினந்தோறும் கடன் பத்திரம், கிரைய பத்திரம் ,பவர் அக்ரிமெண்ட், திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்கள் எடுக்க போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளன.  பொதுமக்கள் நேரடியாக சென்று எந்த வேலையும் நடைபெறுவதில்லை,மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் நெகமம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டராக வெளி நபர் பணி செய்து வருகிறார். ...
தமிழகம்

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதையொட்டி டாக்டர். கலாநிதி வீராசாமி வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக 3,39,646 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்குப் பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் 7:10 மணிவரை வார்டு 48, 48(அ), 52, 52(அ), 53, 53(அ) ஆகிய வட்டங்களில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் வாக்களித்த வாக்காள பொதுமக்களுக்கு...
தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டை புனித சேவியர் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

தமிழகம் முழுவதும் நேற்று அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூவர் மாவட்டத்தில் வைத்த நிலையில் காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டை அரசு உதவி பெறும் புனித சேவியர் துவக்கப் பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்து விலையில்லா நலத் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கினார். வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். ஊரக திட்ட வளர்ச்சி இயக்குநர் ஆர்த்தி, வாழ்வாதார இயக்குநர் நாகராஜன்,...
தமிழகம்

நாகர்கோவிலில் நடைபெற்ற காமராசர் 122 -வது பிறந்தநாள் விழா

மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய முன்னாள் முதலமைச்சர் காமராசர் 122 -வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள திருஉருவச் சிலைக்கு மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் தென்குமரி கல்விக்கழக செயலர் வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் பலர் உள்ளனர்....
தமிழகம்

காட்பாடியில் கன்டெய்னர் மோதி கணவன் – மனைவி உயிரிழப்பு !!

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (52). இவரது மனைவி எலிசபெத்ராணி (45). இவர்களின் ஒரு மகள் ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குடிபாலாவில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவ கல்லூரியில் செவிலியராக முதலாண்டு படித்துவருகிறார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகளை பார்க்க 2 பேரும் காட்பாடி அடுத்த கிறிஸ்தியான்பேட்டையில் 2 வீலரில் கண்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது தடுமாறி விழுந்ததில் 2 பேர் மீது சக்கரம் ஏறியதில்...
தமிழகம்

சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 2024 ஆம் ஆண்டின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா : சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 7 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் (2024) சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள பைஸ் மஹாலில் இன்று (ஜூலை.13) மாலை நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது அவர்கள்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடிக்கு இரங்கல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி !!

வேலூர் மாவட்டம் காட்பாடிகாந்தி நகரை சேர்ந்த தமிழகத்தில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தான தமிழக தலைவரும் பிரபல தொழிலதிபருமான சேகர்ரெட்டியின் தந்தை கடந்த வாரம் காலமானார். சேகர்ரெட்டிக்கு ஆறுதல் சொல்ல அதிமுக பொதுச் செயலாளரும், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை காட்பாடிக்கு ரயிலில் வந்து காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர்ரெட்டி வீட்டிற்கு வந்து அவரின் தந்தையின் படத்திற்கு மாலை அணிவித்து...
தமிழகம்

சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி நீதிமன்றம் இணைந்து 11.07.2024 அன்று சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்புவிருந்தினர்களாக இளையான்குடி, மாவட்ட முன்சிப் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி மற்றும் சிவகங்கை மாவட்ட சட்ட உதவிமையம், தலைவர் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன், இளையான்குடி, பார் கவுன்சில், தலைவர் வழக்கறிஞர் சிவகுமார்,...
தமிழகம்

ஈஷாவிற்கு TNPL – திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் வருகை! ஈஷா தரும் அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது எனப் பயிற்சியாளர் கருத்து

கோவை ஈஷா யோக மையத்திற்கு TNPL விளையாட்டுத் தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் இன்று (12/07/2024) வருகை புரிந்தனர். அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் திரு. குரு கேதார்நாத் அவர்கள் "ஈஷாவின் சூழல் தரும் அனுபவம் வெறும் வார்த்தைகளில் கூற முடியாது, அதனை உணரத் தான் முடியும்" எனக் கூறினார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது....
தமிழகம்

வேலூர் பாலாற்றங்கரையில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !!

வேலூர், ஜூலை 14: வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி காட்பாடி விருதம் பட்டு 15-வது வார்டு பகுதியில் பாலாற்றங்கரையின் ஓரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலமாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மாதத்தின் 2-வது சனிக்கிழமையில் நீர்நிலைகளை தூய்மை செய்தல், மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடந்தது.  இதில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.  இதில் தூய்மை இந்தியா பரப்பரை யாளர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்....
1 21 22 23 24 25 583
Page 23 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!