நெகிழ்ச்சி! மரணப்படுக்கையில் இருந்த தாய்க்காக பாட்டு பாடிய மகன்!!
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார் அவரது மகன். தெற்கு டெல்லியைச் சேர்ந்த சங்கமித்ரா சாட்டர்ஜி (70) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது . ஒருகட்டத்தில் , அவர் இறந்துவிடுவார் என்பதை அறிந்த...
