தமிழக முதல்வரிடம்’உறவினர் பராமரிப்பு திட்டம்’கோரிக்கை வைக்கிறேன்.கமல்ஹாசன்
கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று கவலை தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். அவர் இந்த பிரச்சனை குறித்து, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் நிதிஉதவி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. புதுடெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகை மூலமாக கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்த குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறார். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்கள் நெருங்கிய நட்பு...
