தமிழகம்

செய்திகள்தமிழகம்

தமிழகத்தின் சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது: மேற்கு மத்தியப் பிரதேசம், மேற்கு உத்திரப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உள்ள சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மற்றும் பலத்த காற்று வீசும். குஜராத், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்னல் மற்றும் பலத்த காற்று (மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில்) வீசும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளால மாஹே, லட்சத்தீவுகளின் சில இடங்களில் மின்னல் ஏற்படக்கூடும். கடலோர கர்நாடகாவில் சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, உட்புற...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

நாளை முதல் 30% ஊழியர்களுடன்.. அரசு அலுவலகங்கள் செயல்படலாம் – தமிழக அரசு.!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து அரசு...
செய்திகள்தமிழகம்

கொரோனா நிவாரணம் 2வது தவணை ரூ.2000 எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

கொரனோ நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணையாக ரூபாய் 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இரண்டாவது தவணையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளின்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் முதல்வர் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரூபாய் 2000 இரண்டாவது தவணை மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பு ஆகியவை வழங்குவதற்கான டோக்கன் ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை வழங்கப்படும் என்றும் இந்த டோக்கன்களின் அடிப்படையில் மளிகை பொருட்கள் மற்றும் ஒரு ரூபாய் 2000 ஜூன் 15 முதல் தொடர்புடைய நியாய விலை கடைகளில் 8 மணி முதல் 12 மணி வரை...
செய்திகள்தமிழகம்

உணவகங்களில் இருந்து எடுத்து செல்லப்படும் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது தொடர்பாக, சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அதில், உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவு, சேவை வரிக்கான வரம்புக்குள் உட்படாது. பார்சல் உணவு என்பது வணிகம் மட்டுமே. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து, குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி உணவு உட்கொள்ளும்போது மட்டுமே சேவை வரி பொருந்தும். ஆனால், உணவகங்களில் இருந்து பார்சலாக எடுத்துச் செல்லப்படும் உணவு வகைகளுக்கு சேவை வரி வசூலிப்பது என்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்திருந்தன. இந்த வழக்கு விசாரணை, நீதிபதி அனிதா...
செய்திகள்தமிழகம்

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறை : 7 பேர் கொண்ட குழு அமைப்பு!

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இருப்பினும் இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் , விதிமுறைகள் என தனியாக எதுவும் வரையறுக்கப்படவில்லை. இதனால் சிலர் தங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்தி வந்ததுடன் , மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் psbb பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு என முறையான விதிமுறைகள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க, கல்லூரிக் கல்வி...
செய்திகள்தமிழகம்

தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே நடவடிக்கை

தென் மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் 10,000 மெட்ரிக் டன்களை கடந்தது. தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே இதுவரை, பல மாநிலங்களுக்கு 1463-க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 24,840 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை, விநியோகித்துள்ளது. இதுவரை 359 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தற்போது 30 டேங்கர்களில் 587 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 6 ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன. தென்மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் அளவு 10,000 மெட்ரிக் டன்களை கடந்தது. தென் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தலா 2,500 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன்களை பெற்றுள்ளன. இதுவரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3,797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, தில்லிக்கு 5,826, ஹரியானாவுக்கு 2,135,...
செய்திகள்தமிழகம்

தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் பாதிப்பு; ஆறுகளில் கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டுமென தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலை ஏற்றிச்செல்ல, அதற்னெ வடிவமைக்கப்பட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரிகள் உள்ளன. அரசு மணல் குவாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள், என 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் லாரி உரிமையாளர்கள் லாரிகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. மணல் குவாரிகள் இயக்கப்படாததால்...
செய்திகள்தமிழகம்

உலக மிதிவண்டி தினத்தையொட்டி கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு: ஆழ்கடல் நீச்சல் வீரர் அசத்தல்

கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஆழ்கடல் நீச்சல் வீரர் படங்களை பகிர்ந்துள்ளார். உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. ஒரு காலத்தில் போக்குவரத்துக்கு முக்கியச் சாதனமாக இருந்த மிதிவண்டி, தற்போது பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறிவிட்டது. சமீபகாலமாக மிதிவண்டி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுவை - தமிழக ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த் கடலுக்கு அடியில் மிதிவண்டி ஓட்டினார். இதுதொடர் பான படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர் கூறும்போது, 'தினமும் உடற்பயிற்சி...
செய்திகள்தமிழகம்

+2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில முதலமைச்சர் அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவியதையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்க மத்தியஅரசு கேட்டுக்கொண்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து...
செய்திகள்தமிழகம்

கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின்

கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மறைந்த திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு,காலை, 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, பல்வேறு திட்டப் பணிகளை,முதல்வர் ஸ்டாலின், இன்று(ஜூன் 3) துவக்கி வைக்கிறார். அதன்படி, தலைமைச் செயலகத்தில்,காலை, 10:30 மணியளவில் ரேஷன் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு,கொரோனா நிவாரணத் தொகையின், இரண்டாவது தவணை,ரூ.2,000 வழங்கும் திட்டம், 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்,கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி,13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும்...
1 549 550 551 552 553 563
Page 551 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!