2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் விநியோகம்: 32 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து மருத்துவ பயன்பாட்டுக் கான ஆக்சிஜன் விநியோகம் 2,000 மெட்ரிக் டன் என்ற அளவை நேற்று கடந்தது. இதுவரை 2,006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் உச்சத் தில் இருந்தபோது மருத்துவ ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அங்கு, மே 13-ம் தேதி மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதலில் தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன்...
