தமிழகம்

செய்திகள்தமிழகம்

4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 7, 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும்,9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 6 மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில...
செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் வரும் 7-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோவை, சேலம், மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 7, 8-ம் தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்....
செய்திகள்தமிழகம்

சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு எனக் கூறி போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு: பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்

மோசடி நபர்கள் சிலர், சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவிமற்றும் சிலிண்டரின் எடை அழுத் தத்தைக் கண்டறிவதற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளை பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றுஎண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ரப்பர் குழாய் பரிசோதனை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பொருத்தப்பட்டுள்ள ஆரஞ்சு நிற ரப்பர் குழாயை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து, மாற்ற வேண்டும். அதேபோல, ரெகுலேட்டர் மற்றும் காஸ் அடுப்பு ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணியை வாடிக்கையாளர்களின் ஏஜென்ட்கள் மேற்கொள்வார்கள். அவர்கள் இப்பணியை மேற்கொள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு முன், அவர்கள் வரும் விவரத்தை சம்பந்தப்பட்டஏஜென்சிகள்,...
செய்திகள்தமிழகம்

27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணமும் அதற்கான விதை போட்டதும் நாங்கள் தான் ..!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணம் அதிமுக தான் எனவும் அதற்கான விதை நாங்கள் போட்டது என்றார். இட ஒதுக்கீட்டிற்காக அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொண்டதாகவும், அதிமுக தொடர்ந்த வழக்கிலேயே மற்ற கட்சிகள் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் துரும்பை கூட எடுத்து போடாத திமுக வரலாற்றை திசைதிருப்புவதாகவும் கூறினார். மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தது எனவும், இனி இது போன்ற சம்பவங்கள் அதிமுக எம்.பிக்கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்....
செய்திகள்தமிழகம்

தமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை விளக்கம்

''தமிழக விவசாயிகளை காக்கவே, தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அவரது சிலைக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்காக பாடுபட்ட எந்த தலைவரின் வரலாறும், தமிழக பாடத் திட்டத்தில் இல்லை. தமிழக வரலாற்றில் தீரன் சின்னமலை, அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற குணாளன் நாடார், பொல்லான் என பல நுாறு பேர் இல்லை. இதுபோன்றவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்.வரும் 5ம் தேதி நான் தஞ்சையில் உண்ணாவிரதம் இருப்பது கர்நாடக அரசு, கர்நாடக முதல்வரை எதிர்த்து அல்ல.அங்குள்ள காங்., தலைவர் சித்தராமையா, சிவகுமார் போன்றோரும், 'மேகதாது அணை கட்டுவதை தமிழகத்துக்கு ஏன் கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும்' என கேட்பதை...
செய்திகள்தமிழகம்

வருகிற 13-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் ?

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு 3 நாட்கள் சட்டசபை நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதி நாளன்று முதல்vர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதிலளித்து பேசினார். கடந்த மாதம் 24-ந்தேதியுடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் தயாரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதன் பிறகு ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்தினார். சுமார் 30 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. பட்ஜெட்டில்...
செய்திகள்தமிழகம்

பாடகி கல்யாணி மேனன் காலமானார்

பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்யாணி மேனன். நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே... என்ற பாடலின் மூலம் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு காதலன், முத்து, அலைபாயுதே, பார்த்தாலே பரவசம், விண்ணைத் தாண்டி வருவாயா, 96 உள்பட பல படங்களில் பாடியுள்ளார். 80 வயதான கல்யாணி மேனன் முதுமை காரணமாக உடல்நல பிரச்னை ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடக்கிறது. கல்யாணி மேனன் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனின் தாயார். அவருக்கு கருணாகரன் மேனன் என்ற இன்னொரு மகனும் இருக்கிறார்....
செய்திகள்தமிழகம்

கோவையில் இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது உள்பட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா். கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோன பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மீன், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல்...
செய்திகள்தமிழகம்

அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார் கருணாநிதி – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

தமிழ்நாட்டில் முதன்முதலில், 1921-ம் ஆண்டு மேலவை என்று சொல்லப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், சட்டமன்ற அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் என இருபெரும் விழா நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார். விழாவில் அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் ஆளுநர்...
செய்திகள்தமிழகம்

“மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள்” : முதல்வர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலை பொதுமக்கள் உருவாக்கிவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாம் அலை ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார். அதில், கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனா என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் நோயாக இருப்பதால் அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை . முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது . முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது , கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது . தளர்வுகள் அறிவிக்கப்படும் போது லேசாகப் பரவத் தொடங்குகிறது . இதனைக் கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று...
1 518 519 520 521 522 544
Page 520 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!