தமிழகம்

தமிழகம்

சாத்தூர் அருகே, மில் தொழிலாளி தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - தாயில்பட்டி அருகேயுள்ள மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி குருலட்சுமி (26). சதீஷ்குமார்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை விடுமுறையில், மடத்துப்பட்டிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர் உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகலறிந்த வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, சதீஷ்குமார் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம்...
தமிழகம்

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை புதிய வழிதடத்தில் செல்லும் விரைவு ரயிலுக்கு இராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை

தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் பல அறிவிக்கப்பட்டது. அதில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரயில் இன்று முதல் துவங்கப்பட்டது. செங்கோட்டையிலிருந்து வருகை தந்த சிறப்பு ரயிலுக்கு இராஜபாளையம் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில்வே பயனாளர்கள் சங்கம் சார்பில் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில் இன்ஜினுக்கு வாழை மரக்கன்றுகள், மாலை அணிவித்து ரயில்வே டிரைவர் ராமர், துணை டிரைவர் அருள்ராஜ், கார்டு இளங்கோ ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே செங்கோட்டை மதுரை வரை சென்ற ரயிலில் ஒன்பது பெட்டியில் உள்ளது ஆனால் தற்போது செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்வதால் அதிக பயணிகள் பயன்படும் வகையிலும் பயணி வசதிக்காக 20 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பயணிகளுடைய கோரிக்கையாக...
தமிழகம்

சுற்று சூழலை காக்க வலியுறுத்தி 2 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் – ரோட்டரி உறுப்பினர்கள் 4 பேர் மதுரை வருகை

சுற்றுசூழலைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோட்டரி குழு மதுரை வந்தது. ரோட்டரியின் ஏழாவது செயல்திட்ட பரிந்துரை, மக்கள் உட்பட அனைத்து உயிர்களும் வாழ, சுற்றுச் சூழலைப் பேணிக் காத்தல் மற்றும் நட்பு பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த விழிப்புணர்வை தமிழ்நாடு முழுதும் சென்று பரப்பும் பணியை ரோட்டரி தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ரோட்டரி பன்னாட்டு மாவட்டம் 3203ஐ சேர்ந்த திருப்பூர் ரோட்டரி சங்க உறுப்பினர் ரவீந்திரன், ஈரோடு உறுப்பினர் சிவபால், திண்டல் உறுப்பினர் பூமா மகேந்திரவர்மன், அவிநாசி கிழக்கு சங்க உறுப்பினர் விசித்திரா செந்தில்குமார் ஆகியோர் இப்பயணத்தை மேற்கொள்கின்றனர். 5 நாட்களில், 2 ஆயிரம் கி.மீ., தூரம் பயணிக்கும் இக்குழு, ரோட்டரி சங்கங்களுக்கு சுற்றுச்சூழல் செயல்திட்ட கையேட்டை கொடுத்து, சங்கக் கொடிகளையும் பரிமாறிக்கொள்ளும். திருப்பூரில் மாவட்ட ஆளுநர் இளம் குமரன் தொடங்கிய இக்குழு,...
தமிழகம்

சசிகலா புஷ்பா

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பாக மேயராக 2011 முதல் 2014 வரை இருந்தவர் பின்னர் அதிமுகவில் அதிக நெருக்கம் காரணமாக 2014 ல் அதிமுக சார்பாக ராஜ்யசபாவில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி பிரச்சினை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கபட்டார் இந்த சர்ச்சை அடுங்குவதற்க்கு முன் ராமசாமியை சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார். இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் உள்ளார் இதிலும் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக கட்சி உறுப்பினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டு பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இவர் MP யாக நியமனம் செய்யபட்ட பின்னர் இவருக்கு டில்லியில் தங்குவதற்க்கு மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்ய பட்டது. அவரது பனிகாலம் முடிவடைந்த...
தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இருந்து திமுக , அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருமங்கலம் நகராட்சியில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இருந்து திமுக , அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு - வார்டு வரையறை பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக கூறி , அதனை சீர் செய்து விட்டு கூட்டத்தை நடத்தக் கூறியதால், அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததை யடுத்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். (மொத்தம் உள்ள 27 கவுன்சிலர்களில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையிலும் , அரசு தீர்மானம் என்பதால் ஆணையாளர் தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறி தெரிவித்தார்) மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட அவசர கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யா தலைமையிலும், துணைத் தலைவர் ஆதவன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டு முக்கிய தீர்மானமான வார்டு வரையறை பட்டியலை புதுப்பிக்கப்பட்டுள்ளதை முழுவதுமாக நிறைவேற்றுவதாக கூறி ,...
தமிழகம்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம் நடைபெற்றது. விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு ரவிச்சந்திர பட்டர் பரசுராம சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பால், தயிர், நெய், வெண்ணெய், இளநீர், சந்தனம், விபூதி உட்பட பல்வேறு அபிஷேகங்களை செய்தனர். தொடர்ந்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடி முருகப்பெருமானை வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர். இதே போல தென்கரை அகிலாண்டேஸ்வரி , மூல நாத சுவாமி கோவிலிலும் முருக பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து கந்த சஷ்டி விழா துவங்கப்பட்டது. சோழவந்தான் பகுதியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நேற்று காலை சூரிய கிரகணம் என்பதால் கோவில் சன்னதிஅடைக்கப்பட்டு பின்பு மாலை திறந்து கிரகண சாந்தி செய்து...
தமிழகம்

சிவகாசி பட்டாசு ஆலைகளில் தயாரான பட்டாசுகள் முழுமையாக விற்பனை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை – பட்டாசு விற்பனையாளர் சங்கம் தகவல்

நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுகள் உற்பத்தி குறைவாக இருந்ததால், தயாரான பட்டாசுகள் அனைத்தும் முழுமையாக விற்றுத் தீர்ந்திருப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் பிரதானமான தொழிலாக இருந்து வருகிறது. சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் தாலுகா பகுதிகளில் ஆயிரத்து, 200 பட்டாசு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் நேரிடையாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். நாடு முழுவதிற்குமான பட்டாசு தேவையில், சுமார் 90 சதவிகித பட்டாசுகள் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் பட்டாசுகள் காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை விற்பனையாகின்றன. ஆண்டு தோறும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தின் அவசரத்தேவை

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் கிடையாது. பெரியவர்கள் முதியவர்கள் கைக்குழந்தையுடன் ஆங்காங்கே நின்றபடியே பேருந்து வந்தவுடன் ஏறி செல்கிறார்கள். பெரியகுளம் நகராட்சியில் பலமுறை அதிகாரியிடம் கவனத்தில் தெரியப்படுத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் அந்த மக்கள் வேதனையுடன் மழையில் நனையும் பொழுது நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் அந்த வழியாக போக வர உள்ளார்கள். அந்த நிழல் கூடைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த நிழல் கூடையில் குடி தண்ணீர்டேங்க் உள்ளது அதில் தண்ணீர் ஊற்றி பல மாதங்கள் ஆகிவிட்டது. அதையும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிடையாது. டேங்க்கின் மேல் மூடியும் கிடையாது. மூடி ஒரு பக்கம் டேங் ஒரு பக்கமாக உள்ளது. இதை பெரியகுளம் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் காலை மாலை...
தமிழகம்

திருமங்கலம் அருகே தலித் இன மக்கள் நடத்திய நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது

திருமங்கலம் அருகே தலித் இன மக்கள் நடத்திய நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது - திருமங்கலம் டிஎஸ்பி ஐந்து நிமிடங்களில் கலைந்து செல்லவில்லையென்றால் சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படுவதாக எச்சரித்ததால் போராட்டக்காரர்கள் கலைந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் நேற்று இரவு மது போதை அருந்தி கொண்டிருந்த கல்லூரி மாணவன் அருண்குமார் மற்றும் சக நண்பர்களை, எம். புளியங்குளம் கிராமத்தைச் சார்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கம்பால் சரமாரியாக தாக்கியதில் , கல்லூரி மாணவன் அருண் குமார் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். (முன்னதாக அருண்குமார் மற்றும் சக நண்பர்களுடன் எம் .புளியங்குளத்தில் மது வாங்க சென்ற போது, எம் புளியங்குளத்தைச் சார்ந்த தேவரின மக்களுக்கும் அருண்குமார் நண்பர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாக,...
தமிழகம்

தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்த நபர் கைது

மதுரை கீரைத்துறை காவல் எல்லைக்குட்பட்ட கோதண்ட ராமர் மில் பகுதியில் காளிமுத்து என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்த கீரைத்துறை துணை ஆய்வாளர் சந்தான போஸ் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருளானது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. காளிமுத்துவை கைது செய்த போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் எங்கிருந்து வந்தது யார் சப்ளை செய்கிறார்கள் என அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 453 454 455 456 457 545
Page 455 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!