தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு
தமிழ் வழியில், அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரையில், இது குறித்து குறிப்பிடுகையில் "தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்" என்று ஆளுநர் அறிவித்திருந்தார். அதன் பின்னர், நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில்...