தமிழகம்

தமிழகம்

அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் – ஒபிஎஸ் குற்றச்சாட்டு

அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வென்றுள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாக்குவாதம் நடைபெற்றுள்ளது. முடிவில் எந்தவித முடிவும் எடுக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றிருந்தனர். அப்போது இரு தரப்பு தலைவர்களின் தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தான் என மெரினாவில் கோஷம் எழுப்பினர். தேர்தல் தோல்வி தொடங்கி ஒருவருக்கு ஒருவர் இரு தரப்பினரும் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர். தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதியிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக...
தமிழகம்

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கொல்லாம் அனுமதி

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 10 -ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கின்போது, பின்வரும் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. * அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை...
தமிழகம்

கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது

கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.கடந்த 2020, ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து 520 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. 74 விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, உள்நாட்டு விமானங்கள், சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலும் பயணிகள் விமான சேவையை தவிர்த்தனர். தற்போது கொரோனாவின் 2வது அலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மருத்துவமனைகளில் இட பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்...
தமிழகம்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஷில்பா பிரபாகரன் சதீஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக எம். எல் .ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்றைய தினத்தில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலை ரூ. 3 குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குதல், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் பொதுமக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும், நாளை முதல் மகளிருக்குப் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படாது போன்ற முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து...
தமிழகம்

ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே தற்போது உள்ளது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் தற்போது மிக முக்கியமான கட்டத்தை தமிழகம் எட்டியுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உருவாக்கப்படும் ஆக்ஸிஜன் 25 டன் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றும், பாலக்காட்டில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்னும் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சனிக்கிழமையன்று போதுமான அளவில் ஆக்ஸிஜன் வழங்க முடியாது என்று தமிழகத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறித்து நீதிமன்றத்தில் கூறப்பட்டது. மத்திய அரசு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவும் தமிழக அரசின் ஆக்ஸிஜன் தேவை அளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் இது வெள்ளிக்கிழமைக்குள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் சனிக்கிழமையில் இருப்புக்கள் வழங்கப்படுவதைப் பற்றி அதிகாரிகள் பேசும் அவசரநிலை...
தமிழகம்

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என கூறி முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின்..!

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றனர். இதுதவிர கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க ஸ்டாலின் 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை...
தமிழகம்

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை காலமானார். தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாண்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். கடந்த 1975 ஆம் ஆண்டு மாணவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமான பாண்டு, பின்னர், சிவாஜி, கமல், ரஜினி அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். கேப்பிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகர் பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு...
தமிழகம்

புதிய கட்டுப்பாடுகள் 2021 : திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் படி, உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் நண்பகல்12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அறைகளிலேயே உணவு வழங்க வேண்டுமென்றும், உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் ஏற்கனவே 25 நபர்கள் கலந்து கொள்ள...
தமிழகம்

துரத்தும் கொரோனா: தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்; எவையெல்லாம் இயங்கும்?

கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மளிகை காய்கறி கடைகள், பால் ஆகியவை நண்பகல் 12 வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. பேருந்து சேவைகளுக்கு 50 சதவிகித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளும் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் அலுவலக பணிக்கு செல்பவர்கள் ஆகியோருக்கு அனுமதி இல்லை. தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகத்துறையினர், வங்கி...
தமிழகம்

“1212 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்” ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!

1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில் செவிலியர்களை பணி நிரந்தம் செய்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியை அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருக்கும் எங்கள் செவிலியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்மட்ட குழுவை அமைத்து முன் களப்பணியாளர்கள், செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கைக்கு நன்றி .  கழக தலைவர் @mkstalin அவர்கள், 1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ததை முன்னிட்டு, 'Tamil nadu MRB...
1 448 449 450 451 452 455
Page 450 of 455

Right Click & View Source is disabled.

error: Content is protected !!