இனிமேல் வாரம் ஒரு காற்றழுத்தம்: ஜனவரி 24 வரை தமிழகத்தில் மழை பெய்யும்
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இலங்கை அருகே தற்போது நீடித்து வரும் காற்று சுழற்சி இன்று காலையில் வலுவிழந்து, மெலிந்த காற்று சுழற்சியாக மாறியுள்ளது. இது இன்று மாலைக்குள் முற்றிலுமாக செயலிழந்து விலகும். இது தவிர, கேரளா அருகே நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து சென்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வடக்கு நோக்கி சென்று, குஜராத் பகுதிக்கு சென்று கரையைக் கடக்கும். இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் நேற்று இரவு தாய்லாந்து வளைகுடாப் பகுதிக்கு நுழைந்து,...