சட்டப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல், வாடகை தராமல் கோயில் சொத்து ஆக்கிரமிப்போர் மீது போலீஸில் புகார்: அலுவலர்களுக்கு அறநிலையத் துறை அறிவுறுத்தல்
சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமல், வாடகை செலுத்தாமல் கோயில் இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு பல்வேறுகோயில்களில் ஆய்வு நடத்தி,கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை ரூ.1,600 கோடிமதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, அந்த நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்குள் கம்பி வேலிஅமைக்கும் பணி நடந்துவருகிறது. சட்டப்பூர்வ வாடகை ஒப்பந்தம் இல்லாமலும், உரிய வாடகை செலுத்தாமலும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆணையரது எழுத்து மூலமான புகாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆக்கிரமிப்பாளர் மீது எந்த ஒரு தனிநபரும் எழுத்துப்பூர்வமான புகாரை...