தமிழகம்

தமிழகம்

உணவு, டிபன்பாக்ஸ், போர்வை வழங்கி குழந்தைகளை மகிழ்விக்க நடனம் ஆடி உற்சாகபடுத்திய நடிகர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள நாட்டுப்புற கிராமக் கலைஞர்கள் மிகவும் நலிவுற்ற நிலையில் ஏராளமானோர் உள்ளனர் அவர்களின் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கிட பிரபல திரைப்பட நடிகர் "கங்கணம்" சௌந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிங்கம் 3,ரம்மி, ஜிகர்தண்டா, கொம்பன், கடம்பன் உள்ளிட்ட 32 படங்ககளில் வில்லன், மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்தவர், சௌந்தர்.  தற்போது "கங்கணம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த கொரான காலகட்டங்களில் பொதுமக்கள் மற்றும் பார்வையற்றவர்கள், நலிவுற்ற கிராமிய கலைஞர்கள் என பல்வேறு அமைப்புகளுக்கு நலதிட்டங்கள் வழங்கியவர். அவனியாபுரம் பகுதியில் உள்ள நலிவுற்ற நிலையில் உள் கிராமிய கலைஞர்களின் குழந்தைகளை உற்காக படுத்தி கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கினார். இறையில் கல்லுாரி பேராசிரியர் ஞானபிரபு, நடிகர் கணேசன் ஆகியோருடன் செளந்தர் கிறிஸ்மஸ் விழாவில்...
தமிழகம்

மதுரையில் சைக்கிளில் வந்து கோவில் விளக்கை திருடி செல்லும் மர்ம நபர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு – பரபரப்பு

மதுரையில் தினமும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் வரு கின்றன. அவற்றை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைத்து வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், தெருக்களின் சந்திப்புகளில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பை பாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல டயர் நிறுவனம் ஒன்று உள்ள விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த அனையா விளக்கு ஒன்று காணமல் போனது பார்த்து திடுக்கிட்டனர் வணிக வளாக நிர்வாகினர். உடனே அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது நள்ளிரவு ஒரு மணி 40 மணி நிமிடத்தில் சைக்கிளில் வந்த ஒரு நபர் கோவிலினுள் கையை விட்டு விளக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. எப்போதும் ஆட்கள் நடமாட்டம்...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் நாலை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம்

புதிய வகை கொரோனா தொற்றான எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின்படி மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை முதல் செயல்படுத்தப்படும். விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்களுக்கு 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அல்லது கொரான இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முக்கியமாக முக கவசம் கண்டிப்பாக அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூர் ,இலங்கை, துபாய், சார்ஜாவில் இருந்து விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பயணிகள் மதுரை வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதனை...
தமிழகம்

கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை, துவக்கி வைத்தல்

மதுரை மாநகராட்சி புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.  மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மமேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாளச்சாக்கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகிறது. இவ்வடைப்புக்களை சரிசெய்வதற்கு மாநகராட்சியில் நான்கு கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதாளச்சாக்கடை அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கு...
தமிழகம்

மின் இணைப்பு வழங்கிய திமுக பேரூர் கழக செயலாளர்

கெங்கவல்லியில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள புற்று மாரியம்மன் திருக்கோவிலுக்கு, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு இல்லாமல் இருந்த இந்த ஆலயத்திற்கு தற்போது பேரூர் கழக செயலாளர் திரு.சு. பாலமுருகன் அவர்களின் தொடர் முயற்சியால் இன்று மின் இணைப்பு வழங்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற பூஜையில் பேரூர் கழக செயலாளர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தார்கள் . செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

சுதந்திர போராட்ட தியாகி கக்கன் அவர்களின் 41 வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சர்ருமான கக்கன் அவர்களின் 41 வது நினைவு நாளை முன்னிட்டு.மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் நாகேஷ்வரன் தாளைக்கண்ணன் வெங்கடசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 25 பேர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஸ்ரீமுஷ்ணத்தில் தியாகி கக்கன் ஜி அவர்களின் 44-வது நினைவு நாள் கொண்டாட்டம். அரசு பள்ளியில் படித்த குத்து சண்டை வீரர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தியாகி கக்கன்ஜி அவர்களின் 44-வது நினைவு நாள் நிகழ்வில் தலைவர் ரவி, மாரிமுத்து, தமிழ்வாணன், கண்ணன், ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கக்கன் ஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் டெல்லி பாம்பே போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு கேடயம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளில் கக்கன் ஜி பிறந்தநாள் அன்று இது போன்ற சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதோடு கக்கன் ஜி அவர்களு கரை படாத கை எனவும், அவர்...
தமிழகம்

மாயா குளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை என ராமநாதபுரம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவரிடம் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சியில் சின்ன மாயாகுளம் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாலு கோடியே 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியிலிருந்து எந்த வேலையும் முழுமையாக நடைபெறவில்லை என ராமநாதபுரம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் எஸ் ஆர் ராஜா மற்றும் உறுப்பினர்கள் நாகை மாலி மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் திருப்போரூர் பாலாஜி ஆகியோரிடம் ராமநாதபுரம் சட்டமன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அற்புதகுமார் புகார் மனு அளித்துள்ளார். மேலும் அவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் மாவட்ட துணை செயலாளர் நைனா அசாருதீன் சமூக நல்லிணக்க பேரவையின் மாநில துணைச் செயலாளர் இஸ்மாயில் உடன் இருந்தனர். செய்தியாளர்...
தமிழகம்

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

பாம்பன் பாலத்தில் தொழில் நுட்ப கோளாறால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால், மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மண்டபத்தில் இருந்து சென்னை ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரை, திருச்சி பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.   செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

கள்ளச் சாராயம் விற்றவர் கைது

கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை அடுத்து எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கெங்கவல்லி அருகே நடுவலூர் ஏரிக்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது இதை அடுத்து கெங்கவல்லி மீனவர் தெருவை சேர்ந்த சுரேஷ் 42 என்பவரை கைது செய்தனர் அவனிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர் பின்னர் சுரேஷ் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செய்தியாளர் : மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
1 349 350 351 352 353 546
Page 351 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!