தமிழகம்

தமிழகம்

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது அஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு அதிகாலை கும்ப ஜெபம் கணபதி ஹோமம் ஆஞ்சநேயர் ஹோமம் அபிஷேகம் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. காலை வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மதியம் 3 மணியளவில் கும்ப ஜபம் அஷ்டவர்கள் ஆஞ்சநேயருக்கு 108 திவ்ய ஹோமம் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டவரத ஆஞ்சநேயரே தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு மூன்று வேலையும் அன்னதானம் சிறப்பாக நடந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஈஷாவில் சப்தரிஷி ஆரத்தி – காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நடத்தினர்

ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது. இந்த சப்தரிஷி ஆரத்தி, சிவ பெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறை. இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக , காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவக்கினர். படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய அந்த செயல்முறை சக்திநிலையில் பிரம்மாண்ட தன்மையை...
தமிழகம்

JEE தேர்வு : தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் பிரச்சினை உடனடியாக தீர்வுகாணப்படும் என சு. வெங்கடேசன் எம்.பி யிடம் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாக்குறுதி.

JEE 2023 விண்ணப்பம் செய்யும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இதில் 2020- 21 இல் 10 ஆம் வகுப்பு முடித்த தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. லட்சக் கணக்கான மாணவர்கள் இதனால் தவிப்பிற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்கள். 2020 - 21 கல்வியாண்டில் கோவிட் காரணமாக பொதுத் தேர்வுகளை நடத்த இயலாததால் "எல்லோரும் தேர்வு" (All Pass) என்ற முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டது. ஆகவே மதிப்பெண் அட்டையில் "தேர்வு" (Pass) என்று மட்டுமே பதிவாகி இருக்கும். தற்போது JEE 2023 விண்ணப்பிக்கும் போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை சம்பந்தப்பட்ட இணைய தள படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறிப்பிடப் படவில்லையென்றால் விண்ணப்பம் பதிவாக மறுக்கிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. உடனடியாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தலையிட்டு...
தமிழகம்

பக்தர்களை கொலை செய்ய தயாராக இருக்கும் ஷேர் ஆட்டோக்கள் உயிர் பலி ஆகும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாநகரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது இவர்கள் நினைத்த இடத்தில் வாகனத்தில் திருப்புவதும் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் திடீரென பிரேக் அடிப்பது இவர்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  தற்பொழுது ஐயப்பன் கோவில் சீசன் மதுரை எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகத்தில் இருந்து தினசரி தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தற்பொழுது ஐயப்ப பக்தர்கள் அதிக அளவு வந்து செல்கின்றார்கள். தற்பொழுது அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவில் செல்வதற்கு அரசு பேருந்தும் நீக்கப்படுகிறது மேலும் ஷேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட அளவு 3 பேரை தவிர ஆட்கள் ஏற்ற கூடாது என காவல்துறை அறிவுறுத்தியும் சுமார் 15 முதல் 20 நபர்கள் வரை பஸ்ஸில் பொட்கோடில் தொங்குவது போல் ஆட்களை ஏற்றி விபத்தை ஏற்படுத்தும் வகையில்...
தமிழகம்

மதுரையில் நீர் வரத்து கால்வாய்களில் மீண்டும் சாயக்கழிவுகள் – வெள்ளை நிறமாக மாறும் கால்வாய்கள் – தொற்று நோய் பரவும் அபாயம்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வண்டியூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மற்றும் பெயிண்ட் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது, இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் கழிவுநீர்களை அந்த பகுதியில் இருக்கக்கூடிய நீர்வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்காலில் பெயிண்ட் நிறுவனம் ஒன்று சாயக்கழிவுகளை கலந்ததால் வாய்க்கால் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி தொடர்பாக நியூஸ்7 தமிழ் ஆனது செய்தி வெளியிட்டு இருந்தது,  அதன் எதிரொலியாக அந்த நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கால்வாய்கள் வெள்ளை நிறமாக மாறி உள்ளது.  நீர் வரத்து வாய்க்கால்களில் கழிவுநீர்களை கலக்கக்கூடாது என அந்த பகுதி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை மீறி...
தமிழகம்

இராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி குடிநீர் வரியை குறைக்க அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது . நடைபெற்ற கூட்டத்தில் 1 முதல் 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக கவுன்சிலர் சோலைமலை மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் கணேஷ் ஆகிய இருவரும் இராஜபாளையம் நகராட்சியில் குடிநீர் வரியும் சொத்து வரியும் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர் அதேபோல் இராஜபாளையம் நகர பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை எடுத்து பேசிய நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் சொத்து வரி குடிநீர்...
தமிழகம்

கரும்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் தரணி சர்க்கரை ஆலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் தென்காசி மாவட்டத்தில் செயல்பட்ட தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 25 கோடி ரூபாய் பணத்தை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி தலைவர் G.K.நாகராஜ் தலைமை வகித்தார் .மாவட்ட விவசாய அணி தலைவர் R.மகேஷ்வரன் வரவேற்புரையாற்றினார் .மாநில ஆராய்ச்சியாளர் பாலசுப்ரமணியம்.மாநிலத் துணைத் தலைவர் எஸ் ஆர் தேவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவத் தொகை...
தமிழகம்

டிச.25 ல் தொலைதூர ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கம்

ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (டிச.25) கிளம்பும் தொலை தூர ரயில்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார் கருவியில் இன்று அதிகாலை 2:31 மணியளவில் ரெட் அலர்ட் ஒலித்தது. இதைதொடர்ந்து, ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. சென்சார் கருவி செயல்பாடுகளை கண்காணிக்கும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் வரை ரயில்களை மண்டபத்தில் இருந்து இயக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி இன்றும், நாளையும் (டிச.24) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தினசரி ரயில்களில் திருச்சி, மதுரை பாசஞ்சர் ரயில்களை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கவும், சென்னை, கன்னியாகுமரி விரைவு ரயில்களை மண்டபத்தில் இருந்து கால அட்டவணை படி இயக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச.25 காலை, இரவு வேளைகளில் ராமேஸ்வரத்தில் புறப்பட வேண்டிய...
தமிழகம்

உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் பட்டினத்து மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தொகுதி பொறுப்பாளர் ரகுவரன் தலைமையில் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி டி ஆர் சொக்கநாதன் பட்டினத்து மக்களின் மாவட்ட தலைவர் முத்துமாரி தலைமையில் தெற்கு ஒன்றிய தலைவர் கருப்பையா முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி டி ஆர் சொக்கநாதன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் விபத்து காப்பீடு திட்டம் வீடு இல்லாதவர்களுக்கு மோடி திட்டத்தின் கீழ் வீடு உட்பட பல்வேறு சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் இதில் ஏராளமான பாரதியார் சார்ந்த கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

இராஜபாளையம் பகுதிகளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 5000 பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தாவில் அருகே கல்லணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு பாலாபிஷேகம் இளநீர அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது துளசி சந்தனம் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு  அருள்பாவித்தார். இதேபோன்று ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழி விடு விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது.  5000க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 348 349 350 351 352 546
Page 350 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!