திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை 20- க்கும் மேற்பட்டோர் முற்றுகை – கடந்த ஆட்சி காலத்தில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு, வீட்டுமனை பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள பத்தாவது வார்டு பகுதியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு இதுவரை, வீட்டுமனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், நகராட்சி கவுன்சிலர் ஜாஹூர் உசேன் ரம்ஜான் பேகம் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தங்களுக்குரிய பட்டா வழங்க கோரி 20 - க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், முற்றுகையிட்டனர் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு, அதிமுக - வினருக்கு சாதகமாக உள்ளவர்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கியதால், தாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டும் இதுவரை பட்டா வழங்காததால், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
