தமிழகம்

தமிழகம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட கூடிய கிறிஸ்தவர்களுக்கு பேராலயத்திற்கு  மதுரை பாத்திமாநகர் சர்ச் மற்றும் ஞானஒளிவுபுரம் சர்ச் நேரடியாக சென்று வாழ்த்துக்களையும் கேக் வகைகள் கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கேக் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வு  மதுரை துணை மேயர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்...
தமிழகம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனுதவிகளை வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாயப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி, 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான வங்கிக்கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், ஆகியோர் சிறப்புரை வழங்கியும், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையேற்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை. டாக்டர்.அதுல்யா மிஸ்ரா, , நில நிருவாக ஆணையர் எஸ்.நாகராஜன், செயல் உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டாக்டர்.கே.பி.கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை)...
தமிழகம்

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள வியாபார சங்க கட்டடத்தில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய கிளை நிர்வாகிகளுக்கு, சிறப்பு விருந்தினர்கள் விருது வழங்கி பாராட்டினார்கள். பின்னர் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், நுகர்வோர் தினம் தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், நுகர்வோர் கடமைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், புகார் அளிக்கும் இடம் குறித்தும், நிவாரணம் பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் சிறப்பு விருந்தினர்கள் அளித்தனர். உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் மற்ற பொருட்கள்...
தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுதர்சனன் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றனர். நகரின் முக்கிய வீதிகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் மஞ்சள் பைகளை உபயோகிப்போம் கழிவுகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளரிடம் வழங்குவோம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பேரணி சென்றது. அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, வாடிப்பட்டி சமுதாய மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் என் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விமானத்தில் வரும் பயணிகளிடம் கொரோனா ஒப்புதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு அவர்களின் முகவரி மற்றும் காய்ச்சல், சளி தன்மை பதிவு செய்யப்பட்டு உள்ளது. 12 வயதுக்குட்பட்ட  பயணிகளிடம் காய்ச்சல் சளி தொந்தரவுகள் இருந்தால் பரிசோதனை செய்யப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு கொரோன தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் ஊசியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக கவசம், அணியவும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயனிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மதுரை...
தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏழாவது வார்டு செயலாளர் டிரைவர் மணி, தங்கத்துரை, பாண்டி, அழகர், கென்னடி ,வாத்தியார் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏழாவது வார்டு செயலாளர் டிரைவர் மணி, தங்கத்துரை, பாண்டி, அழகர், கென்னடி ,வாத்தியார் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

பெரியகுளம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 தனியார் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சி சார்பாக போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணைசாலைஉள்ள மீனாட்சிபார்பல வருடங்களாக உள்ளது காந்தி சிலை மற்றும் தேனி சாலை பகுதியில் 3 தனியார் மதுபான கடை இயங்கி வருவதால் இந்த கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி தனியார் மதுபான கடையை மூட வலியுறுத்தி மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாலும் அதை கண்டிக்கும் விதமாக இன்று பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே விசிக, மதிமுக, தமுமுக, CPI, CPI (M), SPDI, இஸ்லாமியர் கூட்டமைப்பு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிபோன்ற கட்சி சார்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மூன்று தனியார் மதுபானம் கடை இயங்கி வரும் பிரதான சாலையாக உள்ளதாகவும் வழியாக பள்ளி...
தமிழகம்

5000 தற்காலிக சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – தமிழ்நாடு சுகாதார மற்றும்.துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்க கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு பேட்டி

தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நலச் சங்கத்தில் மதுரை மாவட்ட அமைப்பு கூட்டம் மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை நடைபெற்றது இந்த கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் அன்பரசு தற்போது பணி செய்து வரும்.5000 தற்காலிக.சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.  கொரோனா காலகட்டத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தவர்களை  தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி கிடைக்காத சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சியை கடந்த காலங்களில் தமிழக அரசே நடத்தி வந்த நிலையில் தற்போது தனியாரிடம் ஒப்படைத்ததுள்ளதை ரத்து செய்து மீண்டும் தமிழக அரசே நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்.5000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  1989 ஆம் ஆண்டு தமிழக...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி, அவரது பிரம்மாண்ட திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டசெயலாளர் மணிமாறன் தலைமையில் , முன்னாள் எம்எல்ஏ லதா அதியமான் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டியன், பெரியசாமி, ஈஸ்வரன், ராமமூர்த்தி, நாகராஜன், சேடப்பட்டி ஜெயச்சந்திரன் மற்றும் பொதுக்குழு, தலைமைக்குழு ,செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான திமுக -வினர், நிர்வாகிகள், தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ,அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 346 347 348 349 350 546
Page 348 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!