உசிலம்பட்டி பகுதியில் புல்லட் வாகனத்தில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டிகளிடம் – தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது, 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையபட்டியைச் சேர்ந்த காந்தியம்மாள், தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி, நரியம்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் உள்ளிட்ட மூதாட்டிகளிடம் புல்லட் வாகனத்தில் வரும் இரு பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் என மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் முகவரி கேட்பது போன்று நடித்து மூதாட்டிகள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயின்களை தொடர்ச்சியாக பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.,அடுத்தடுத்து நடைபெற்ற இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக உசிலம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், சிந்துபட்டி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து மதுரை மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் மற்றும் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு உத்தரவின் பேரில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வந்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அவர்கள்...

