தமிழகம்

தமிழகம்

உசிலம்பட்டியில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் குடில்கள் அமைத்து குடியேற்றக் கோரி 5 நாட்கள் சலூன் கடையை அடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டியில் 120க்கும் மேற்ப்பட்ட முடிதிருத்துவோர் நலச்சங்கத்தினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.ஆனால் இந்த இடம் ஒதுக்கப்பட்டதற்கு அதன் அருகில் குடியிருப்பவர்களும்; இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் இடம் அளவீடு செய்து கல் ஊண்டி இடம் ஒதுக்குவதில் பிரச்சனை இருந்து வருகின்றது.கடந்த ஒரு வருடத்தில் பலமுறை அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் இடம் அளவீடு செய்யச் சென்றாலும் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக இடம் அளவீடு செய்யாமல் திரும்பியுள்ளனர்.இந்நிலையில் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் குடில்கள் அமைத்து குடியேற்றக் கோரியும் இலவச பட்டா வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்தும் முடிததிருத்துவோர் நலச்சங்கத்தினர் 5 நாட்கள் சலூன் கடையை அடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உசிலம்பட்டிப்...
தமிழகம்

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகும்

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகும். இத் திருக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளாகவே, கோவிலில் உட்புற பகுதிகளில் முட்புதர்கள் பெருமளவில் குப்பை கிடங்குகளாக பராமரிப்பின்றி காணப்படுவதால், அதனுள் விஷமுடைய ஜந்துக்கள் பாம்புகள், தேள், பூரான் உள்ளிட்ட விஷமுடைய ஜந்துகள் நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். அலட்சியப் போக்கில் கோவில் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் அன்னதான கூடத்தில் அன்னதானம் உண்ணவரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவதில்லை எனவும் , அங்கு கோயிலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு நீரையே சமைத்தும், பக்தர்களுக்கும் அதனையே குடிநீராக வழங்கப்படுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் இதற்கு...
தமிழகம்

கோயில் உண்டியலை உடைத்து நகை பணம் கொள்ளை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டுநீரேத்தான் கிராமம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோயில் ஊரின் முகப்பு பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாகவே சிவன் கோயில் உள்ள இடங்களில் எல்லாம் துர்க்கை அம்மன் சன்னதி இருக்கும் துர்க்கைக்கு என தனி ஆலயம் என்பது ஆசியாவிலேயே நான்கு இடங்களில் தான் உள்ளதாக சொல்லப்படுகிறது அதில் ஒன்றுதான் இந்த திருத்தலம். இந்தக் கோயிலில் நேற்று இரவு சரியாக 12 .58 உள்ளே நுழைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் சன்னதிக்கு முன்னால் உள்ள உண்டியலில் அடிப்பகுதியில் உள்ள கதவை உடைத்து பின் உண்டியலில் உட்புறத்தில் உள்ள தடுப்பையும் தகர்த்து எடுத்துவிட்டு உள்ளிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மஞ்சள் கலர் டி-ஷர்ட் மற்றும் ப்ளூ கலர்...
தமிழகம்

துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் பழநிக்கு பாதயாத்திரை

துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் 30 பேர் பழநிக்கு பாதயாத்திரையாக சென்றனர். நடிகர் அஜீத் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் துணிவு. இந்த படம் வெற்றி பெற வேண்டி மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். பரவை ஏகாம்பரஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதியில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை கிளம்பினர். பரவை கார்த்தி தலைமையில் அஜீத் ரசிகர் மன்றத்தினர் பரவை ராகுல், ராக்கெட் ரஞ்சித், பிரசன்னா , ராஜா, உட்பட ஏராளமானோர் பாதயாத்திரையாக கிளம்பி சென்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பிரபல ரவுடி ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் கொலை வழக்கில் ஒருவர் கைது .நண்பனாக இருந்து செல்போனை திருடியதால் தலையில் கல்லைப் போட்டு கொலை நடந்த சம்பவம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாராம் மகன் ஜெயகுமார் (வயது 29) பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் 4 வழிப்பறி, திருட்டு வழக்குகளும் செக்காணுரணி காவல நிலையத்தில் 3 வழிப்பறி வழக்குகள் உள்ளது. திருமணமாகத ஜெயக்குமார் வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்காக வழிப்பறி, திருட்டு செயல்களில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் நாகமலை புதுக்கோட்டை அரசினர் மாணவர் விடுதி வெளிப்புறத்தில் ஜெயக்குமார் விக்னேஷ் மற்றும் 3 பேர் குடிபோதையில் இருந்துள்ளனர்.  அப்போது ஜெயகுமார்  போதையில் இருந்த விக்னேஷ் மற்றும் நண்பர்கள் செல்போனை திருடி செக்கானூரணியில் விற்றதாக விக்னேஷ் சிற்கு தெரிய வந்தது. இது குறித்து விக்னேஷ் மற்றும் நண்பர்கள் நேற்று இரவு செல்போன் விற்றது தொடர்பாக ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளனர்.  அப்போது ஜெயக்குமார் தகராறில் ஈடுபடவே ஆத்திரமடைந்த விக்னேஷ் ஜெயக்குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை...
தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி பயிற்சி

கெங்கவல்லியில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உலவர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கெங்கவள்ளி அருகே வலசக்கல்பட்டி மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ்வு மக்கள் நாட்டு வெற்றிகளை மற்றும் வெள்ளை வெற்றிலை அதிகம் சாகுபடி செய்து வருகிறார்கள் மக்களிடம் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் நேரில் சென்று வெற்றிலை சாகுபடி செய்யும் முறையை குறித்து கேட்டறிந்தனர் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து வெற்றிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்கள் நெறிமுறைகள் வாழ்வாதாரங்கள் கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனர் இந்த கள ஆய்வின் போது கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா உதவி அலுவலகர் கல்பனா. சந்திரசேகர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடன்இருந்தனர் ....
தமிழகம்

வேலூரில் நள்ளிரவு சந்தன மரத்தை கடத்தியவர்களை சினிமா பாணியில் மடக்கிபிடித்த காவல்துறை

வேலூர் அடுத்த காட்பாடியிலிருந்து நள்ளிரவு சந்தன மரத்தை வெட்டிவேலூர் வழியாக ஆரணிக்கு கடத்தி செல்வதாகவேலூர் எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. வேலூர் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் காவலர்களுடன் ஊரீசு கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிற்காமல் செல்ல, காவலர்கள் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தனர்.பின்பு ஒருவனை கைது செய்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். 20 கிலோ எடை கொண்ட சந்தனமரம், கத்தி, 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவளை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

குற்றாலம் அருவியில் தண்ணீரில் சிக்கிய குழந்தை; துணிச்சலுடன் மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு

பழைய குற்றாலம் அருவியில் திடீரென விழுந்து தண்ணீரில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்கப்பட்டது. துணிச்சலுடன் குழந்தையை மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை ஹரிணி (வயது 4) அருவியின் முன்புறம் தண்ணீர் விழும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென குழந்தை அருவியின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள துவாரத்தின் வழியாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த விளாத்திகுளம் இளைஞர் விஜயகுமார் துணிச்சலுடன் சென்று பாறையின் இடுக்கில் பிடித்துக் கொண்டு நின்ற குழந்தையை மீட்டு மேலே தூக்கி வந்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்...
தமிழகம்

பணிமனைக்கு சென்ற பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் மோதிய முதியவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை காளவாசல் புறவழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் உள்ளது இங்கு நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் பேருந்துகள் ஒவ்வொன்றாக பணிமனைக்குள் வந்து கொண்டிருந்தது அப்பொழுது மதுரை கோவில் பாப்பா குடியை சேர்ந்த திருநாவுக்கரசு வயது 60 இவர் பழங்காநத்தம் இருந்து காளவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பணிமனைக்கு பணியை முடித்து பேருந்துகள் ஒவ்வொன்றாக உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பணிமனைக்கு சென்று விட்டு வந்த அரசு பேருந்து மீது பின் படிக்கட்டு பகுதியில் பலமாக இவர் மோதினார். இதில் நிலைகுலைந்த அவர் படுகாயம் அடைந்தார். அப்பொழுது பணி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக 108 அவசரகால ஊர்தி தகவல் தெரிவிக்கப்பட்டு...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு. மலைவாழ் மக்களின் குழந்தைகளைக் கொண்டு, வீடுகளை திறக்கச்செய்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திக்கோயில் பகுதியில், சுமார் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் வசிப்பதற்கான புதியதாக வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. தமிழக அரசும், ராம்கோ நிறுவனமும் இணைந்து 12 பசுமை வீடுகளை கட்டி முடித்துள்ளனர். மலைவாழ் மக்கள் புதிய வீடுகளில் குடியேறும் விழா, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, புதிய வீடுகளை மலைவாழ் மக்களின் குழந்தைகளைக் கொண்டு திறந்து வைத்தார். ஆட்சியர், தங்களது குழந்தைகளைக் கொண்டு வீடுகளை திறந்து வைத்த நிகழ்ச்சி மலைவாழ் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் ஆரவாரமாக கைகளைத் தட்டி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது, மலைவாழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது....
1 337 338 339 340 341 546
Page 339 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!