தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, கடந்த பல வருடங்களாக திறந்த வெளியில் செயல்பட்டு வந்ததால், மழைக்காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகமெங்கும் உள்ள நெல் மூடைகள் சேமிப்பு கிடங்குகளை பாதுகாப்பதற்காக , இரும்பினால் ஆன கூடாரங்கள் அமைத்து நெல் மூடைகளை பாதுகாக்க உத்தரவிட்டதையடுத்து, தோப்பூரில் அமைந்துள்ள கிட்டங்கியில் 18000 டன் மெட்ரிக் கொள்ளளவு கொண்ட நெல் மூடைகளை சேமிக்கும் அளவிற்கு, கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருவதை , தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறும் போது , தமிழ்நாடு முழுவதும் 213 கிட்டங்கியில் ரூபாய் 138 கோடியில் 2.86...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொடிக்குளம் கிராமம். இக்கிராமத்தில் சின்னக்கண்மாய் பெரியகண்மாய் என இரு கண்மாய்கள் உள்ளன.இக்கண்மாய்களை ஏலம் விட இக்கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கண்மாய் ஏலம் விடுவது பலமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சின்னக்கண்மாய் ஏலம் விடப்பட்டதாகவும் பெரியகண்மாய்க்கு இன்று ஏலம் விட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு ஆத்திரமடைந்த கிராமமக்கள் கண்மாய் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கொடிக்குளம் உள்பட 5 கிராம மக்கள் ஏலம் நடைபெற இருக்கும் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் உள்ள நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது..சம்பவமறிந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்றைய ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் போடி அணி வெற்றி.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவில் ஆண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு திடலில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 14 அணிகள் பங்கேற்றது. போட்டிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலில் நாக்கவுட் முறையிலும், நான் அவுட் முறையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு லீக் சுற்றும் முறையிலும் போட்டிகள் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போடி கூடை பந்தாட்ட கழகமும், பெரியகுளம் திருவேங்கடம் குடைப்பந்தாட்ட கழகமும் போட்டியிட்டதில் போடி கூடை பந்து கழகம் 84க்கு 77 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று போடி கூடை பந்தாட்ட கழக அணி கோப்பையை வென்றது. முன்னதாக...
தமிழகம்

வேலூரில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் கவிஞர்களுக்கு பாராட்டு விழா

வேலூர் கேரள சமாஜ் மண்டபத்தில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் ம.நாராயணன், ஆற்காடு கவிஞர் மா. ஜோதி, முனைவர் பட்டம் பெற்ற கவிஞர் ச.லக்குமிபதி ஆகியோருக்கு பாராட்டு விழாவும், பொங்கல் விழாவும் நடந்தது. கவிஞர் பிரவீன்ரவி வரவேற்றார். தொடக்க உரையை நாடக சிற்பி வேலூர் ராதாகிருஷ்ணன் ஆற்றினார்.ரா.சீனிவாசன், எஸ்.ரமேஷ்கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கவிஞர் அ.பெர்னார்ட்ஷா தலைமை தாங்கினார் திருப்பத்தூர் தூயநெஞ்சகல்லூரி தமிழ்த்துறை தலைவர் பொன்.செல்வக்குமார் சிறப்புரையாற்றினார். கவிஞர்கள் பாரிதாசன், வேல்முருகன், ரமேஷ், பொறியாளர் வெங்கடேசன், சாந்தா, கார்த்திகேயன், சம்பத் ஆகியோர் பேசினர். கவிஞர் கோ.ராஜேந்திரன் நன்றி கூறினார். ஏற்பாட்டை தமிழக எழுத்தாளர் சங்க தலைவர் பெர்னார்ட்ஷா, செயலாளர் பாரிதாசன், பொருளாளர் வேலூர் ராதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

வேலூர் அருகே பாலமதி மலையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பாலமதி மலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பாகாயம் காவல்துறைக்குதகவல் கிடைத்தது. உடனடியாக வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் பி எஸ் பி திருநாவுக்கரசு மற்றும் பாகாயம் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரோதபரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தீவிர சிசிடி விமூலம் விசாரணை செய்ததில் இந்தப் பெண்ணை கொலை செய்த நபர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் ரமேஷ்பாபு என்பவரின் மகன் கார்த்தி (22)என்று தெரியவந்தது உடனடியாக கார்த்திகை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வேலூர் காட்பாடி விஜிராவ்நகரில் வசித்து வந்த கார்த்திக் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் ஏசி மெக்கானிக்காகவேலை செய்து...
தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகை, காட்பாடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியாளர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்

வேலூர் மாவட்டத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அருகில் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

இராஜபாளையத்தில் அடுப்பில்லா சமையலில் 100 நபர்கள் 100 விதமான உணவுகளை ஐந்து நிமிடம் 13 வினாடிகளில் செய்து முதல் நோபல் உலக சாதனை படைந்தனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் மற்றும் நம் பாரம்பரிய உணவுகளை இளைஞர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சரண்யா என்ற சமூக ஆர்வலர் 100 நபர்களை வைத்து 100 விதமான இயற்கை உணவுகளை அடுப்பில்லாமல் சமையல் செய்து சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு .  இந்த சாதனையில் தேனி. விருதுநகர். மதுரை .உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 நபர்கள் கலந்து கொண்டு நோபல் உலக சாதனை நடுவர்கள் மத்தியில் சாதனை முயற்சி ஈடுபட்டனர் . இந்த முயற்சியில் ஐந்து நிமிடம் 13 வினாடிகள் 100 நபர்களும் 100 விதமான இயற்கை உணவுகளை செய்து சாதனை படைத்தனர் நோபல் உலக சாதனை நடுவர்கள் டாக்டர் அரவிந்த். ஹேமத்குமார். வினோத்குமார். பரணிதரன்.ஆகியோர் உணவுகளை ருசித்து பார்த்து...
தமிழகம்

இராஜபாளையம் அருகே முகவூரில் இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. மாநிலத்திலிருந்து 16 மாவட்டத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் இந்த போட்டியானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 21 கிலோமீட்டர் மற்றும் 7 கிலோமீட்டர் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்காக 3 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியினை இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் மற்றும் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரத்தான் போட்டிகளை துவக்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டு...
தமிழகம்

இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி 24 வது பகுதி மக்கள் முறையான குடிநீர் வழங்க கோரியும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ராஜபாளையம் டு சத்திரப்பட்டி செல்லும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . பகுதி மக்கள் கூறும்பொழுது 15 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதாகவும் அதனை முறைப்படுத்தி குடிநீர் வழங்க வேண்டும் அதேபோல் இந்த பகுதியில் பேருந்து நின்று செல்வதற்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என கோரியை வைத்து...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 2000 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கண்பார்வை குறைபாடு உள்ள நபர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமை திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் துவக்கி வைத்தார். உடன் ராஜபாளையம் திமுக வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா, தெற்கு நகர கழக செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பயனாளிகளுக்கு கண் பார்வை திறன் மற்றும் கண் பார்வைத் திறன் குறைபாடு மருத்துவர்கள் மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது. செய்தியாளர் :...
1 293 294 295 296 297 546
Page 295 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!