தமிழகம்

தமிழகம்

மனிதநேய வார நிறைவு விழா

மனிதநேய வார நிறைவு விழாவில், 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,  மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தில் மனித நேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் எவ்வித பாகுபாடுன்றி ஒற்றுமையுடனும் மனிதநேயத்துடனும் வாழ்ந்திடும் பொருட்டு, மனிதநேய வார நிறைவு விழா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மனிதநேயத்தை எல்லோரும்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நாளை 1-ம் தேதி வேலூர் வருகைத் தரும் முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் உதவி ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் செந்தில்குமார்.மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, ரமேஷ், டீட்டா சரவணன் உள்ளிட்ட கவுன்சிலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான்அருகே பண்ணை வீட்டில் முன்னால் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி எளிய முறையில் கொண்டாடினார்

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு க அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் உடன் நலத்திட்ட உதவிகள் வழங்கி.எளிய முறையில் கொண்டாடினார் சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று மதுரை வந்தபோது தன்னை சந்தித்து ஆசி பெற்றதன் காரணமாக சில ஆண்டுகளாக பிறந்தநாள் கொண்டாடாமல் இருந்த முக அழகிரி நேற்று சோழவந்தான் அருகே தென்கரை பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்கள் மற்றும் பண்ணை வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுடன் பிறந்த நாளை எளிய முறையில்.கொண்டாடி அவர்களுக்கு உதவிகள் வழங்கினார் இதில் கவுன்சிலர்கள் முபாரக் மந்திரி குட்டி மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார் கோபிநாதன் மற்றும்.ராஜ்குமார் விக்கிரமங்கலம் உல்லாசம்.பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது குருவித்துறை மன்னாடி மங்கலம் தாமோதரன் பட்டி ஐயப்பன் நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இருந்து மஞ்சள் நீராடி ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், ஆதரவற்ற சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 64 லட்சம் செலவில் 64 சாலையோர வியாபாரிகளுக்காக நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வசிக்கும் ஆதரவற்ற சாலையோர வியாபாரிகள், சாலையில் மண் தரையில் சுகாதாரமின்றி பழங்கள் , காய்கறிகள் விற்பதை தடுப்பதற்காக, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை எண்ணி, எவர்சில்வர் உலோகத்தால் ஆன தள்ளு வண்டியை நகராட்சி அலுவலகத்தின் தலைவர் ரம்யா, மற்றும் துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் வழங்கினர். இதற்கான மொத்த மதிப்பு 64 லட்சம் ஆகும் . இதில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்களும், மாற்றுத்திறனாளி உட்பட பூ விற்கும் தொழிலாளர்களுக்கும் இது போன்ற வாகனங்கள் மிக்க பயனுள்ளதாக அமையும். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு விருது

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறந்த சிகிச்சை மற்றும் செயல்பாடுகளுக்கான தமிழ்நாடு அரசின் மாநில அளவிலான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுச் சான்றிதழை பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த வருடம் அதிகமான பயனாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு மாநில அளவில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டது. மருத்துவமனைகளின் வரிசையில் தென்காசி மாவட்டத்தில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் ஜனவரி 26, 74 வது குடியரசு தினத்தன்று வழங்கினார். தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும்...
தமிழகம்

வேலூருக்கு நாளை முதல்வர் வருகை’ கள ஆய்வில் முதலமைச்சர். என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க நாளை 1-ம்தேதபுதன்கிழமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காலை ரயில் மூலம் மதியம் 12.30 மணியளவில் காட்பாடி ரயில்நிலையம் வருகின்றார். அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.பின்பு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்விசார்ந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.பின்பு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது..பின்பு தனியார் ஓட்டலில் தங்கிவிட்டு மாலை வேலூர் விஐடி சென்று கட்டிடம் ஒன்றை திறந்துவைக்கிறார். மறுநாள் 2-ம் தேதி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார், முதல்வர் வருகையொட்டி வேலூர் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2 டிஐஜிக்கள், 6எஸ்பிக்கள் மற்றும் 3 ஆயிரம்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே செம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க அரசு காலம் தாழ்த்தி வருவதால் களத்தில் வீணாகும் நெல்மணிகள்;.விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செம்பட்டி கன்னியம்பட்டி , ராமநாதபுரம் , கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி,மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 1000க்கும் மேறப்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.இப்பகுதி மக்கள் நெல்களை சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள செல்லம்பட்டியிலுள்ள அரசின் நெல் கொள்முதல் மையத்திற்கு சென்று விற்பனை செய்து வந்தனர்.தூரம் அதிகமாக இருப்பதால் தங்கள் பகுதியிலேயே அரசின் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில் செம்பட்டியில் விரைவில் நெல் கொள்முதல் மையம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நம்பிய கிராமக்களும் நெற்பயிர்களை அறுவடை செய்து விற்பனை செய்யாமல் கிராமத்திலுள்ள களத்தில் (பொது இடத்தில்) நெல்களை குவித்து வைத்துள்ளனர்.ஆனால் இதுவரை அரசு சார்பில் நெல் கொள்முதல் மையம் அமைக்க எந்த முயற்ச்சியும் மேற்க்கொள்ளப்படவில்லை.இதனால் விவசாயிகள் அறுவடை செய்து வைத்திருந்த நெல்...
தமிழகம்

சிவகாசியில் துணிகரம் – பட்டப்பகலில் ரேசன் கடையில் இருந்து அரிசி மூடைகளை கடத்திய, பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பராசக்தி காலனி பகுதியில் உள்ள ரேசன் கடையில் முஸ்லீம் தெரு பகுதியைச் சேர்ந்த மும்தாஜ்பேகம் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை குறிப்பிட்ட இந்த ரேசன் கடையின் அருகில் மினி சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு, ரேசன்கடையில் இருந்து ரேசன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கடை ஊழியர் மும்தாஜ்பேகம் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் ரேசன் கடையிலிருந்து மூடை, மூடையாக அரிசி கடத்தப்படுவதைப் பார்த்து கடையின் பெண் ஊழியர் மற்றும் வாகன ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிலர், சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், ரேசன் கடை ஊழியர் மும்தாஜ்பேகம், மினி வேன் ஓட்டுநர் கார்த்திக்...
தமிழகம்

சிவகாசி அருகே, இலவச எலும்பு நோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றம், சுருதி மருத்துவமனை, 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை, துளிர்கள் இணையம், ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் இணைந்து பொது மருத்துவம் மற்றும் எலும்பு நோய் மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர். விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை, விஸ்வநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகராஜன் தலைமையில், 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகேந்திரன், ஹேண்ட் இன் ஹேண்ட் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வரி, நுகர்வோர் பாதுகாப்புசேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தனர். சுருதி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 200க்கும்...
1 291 292 293 294 295 546
Page 293 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!