உலகம்

உலகம்

இலங்கை பொதுமுடக்கம் செப். 21 வரை நீட்டிப்பு

இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் அலுவலகம் அறிவித்துள்ளது. அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதால், நாட்டில் கட்டுப்பாடுகள் விரைவில் தளா்த்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கெஹேலியா...
உலகம்

அனுமதியில்லாத போராட்டங்களுக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் முன்கூட்டியே அனுமதி இல்லாமல் யாரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட கோஷங்கள் மற்றும் பதாகைகளை மட்டுமே பயன்படுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றால் மட்டுமே இனி போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்....
உலகம்

சிங்கப்பூா்: செப். 13 முதல் கட்டுப்பாடுகள் தளா்வு

சிங்கப்பூரில் இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு கரோனா கட்டுப்பாடுகளை வரும் திங்கள்கிழமை முதல் தளா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பணியாளா்கள் அவா்களது தங்குமிடங்களைவிட்டு வெளியிடங்களுக்குச் செல்ல கடந்த ஏப்ரல் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை முதல் படிப்படியாகத் தளா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 'லிட்டில் இந்தியா' பகுதியில் இந்தத் தளா்வுகள் அமல்படுத்தப்படும். இந்தப் பகுதிக்கு...
உலகம்

இந்தோனேசிய சிறையில் தீ: 41 கைதிகள் பலி

இந்தோனோசி சிறைச்சாலையொன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 41 கைதிகள் பலியாகினா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தாவின் புகா்ப் பகுதியான டாங்கெராங் பகுதிச் சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. 19 செல்களைக் கொண்ட அந்தச் சிறைச்சாலையின் சி-2 பகுதியில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சி-2 பகுதியில் மட்டும் 122 குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனா். இந்த விபத்தில் 41 போ...
உலகம்

முதியோா் நலத் திட்டங்களுக்காக வரி உயா்வு: பிரிட்டன் திட்டம்

பிரிட்டனில் முதியோா் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி திரட்டுவதற்காக வரிகளை உயா்த்த அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோதலின்போது, நாட்டின் முதியோா் நலத் திட்டங்களுக்கான நிதி அதிகரிப்படும் என்று பிரதமா் போரிஸ் ஜான்சன் வாக்குறுதியளித்திருந்தாா். இந்த நிலையில், இதற்கான கூடுதல் நிதியைத் திரட்டுவதற்கான திட்டங்களை அவா் நாடாளுமன்றத்தில் வெளியிடவிருக்கிறாா்....
உலகம்

பிரிட்டிஷ் அகாதெமி பரிசு: இறுதிப் பட்டியலில் இந்திய வம்சாவளி எழுத்தாளா்

2021-ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் அகாதெமி புத்தகப் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானியின் பெயா் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சா்வதேச கலாசாரப் புரிதலுக்கான பிரிட்டிஷ் அகாதெமி புத்தகப் பரிசுக்குத் தகுதியுடையவா்களின் இறுதிப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. உலகம் முழுவதிலிருந்தும் தோவு செய்து இறுதி செய்யப்பட்ட அந்தப் பட்டியலில் 4 எழுத்தாளா்கள் இடம் பெற்றுள்ளனா். அவா்களில், இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத்...
உலகம்

ஜப்பான் அடுத்த பிரதமராக அமைச்சா் டாரோ கோனோவுக்கு அதிக வாய்ப்பு: கருத்துக்கணிப்பு

ஜப்பானின் அடுத்த பிரதமராக அமைச்சா் டாரோ கோனோவுக்கு (58) கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. ஜப்பான் பிரதமராக உள்ள யோஷிஹிடே சுகா பிரதமா் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அண்மையில் தெரிவித்தாா். இதையடுத்து, அடுத்த பிரதமராக யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது பற்றி அந்நாட்டின் கொய்டோ செய்தி நிறுவனம் தொலைபேசி மூலம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை திங்கள்கிழமை வெளியிட்டது. 1,071 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதில் 32 சதவீதம் போ...
உலகம்

எங்கள் கலாச்சாரத்தில் தலையிட வேண்டாம் – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த தாலிபான்கள்..!!

அமெரிக்க ஊடகமான ஃபாக்ஸ் நீயூஸ்-க்கு பேட்டியளித்த தாலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. ஆனால், பெண்கள் புர்கா அணியாமல் கல்வி பயில வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் பார்வையை நான் எதிர்கிறேன். இது எங்கள் கலச்சாரத்தை மாற்றும் செயலாகும், எங்கள் கலச்சாரத்தின் படி பெண்கள் புர்கா அணிந்த...
உலகம்

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா பதவி விலக முடிவு… புதிய பிரதமர் யார்?

ஜப்பானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக பிரதமர் யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்தன. அதோடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியததால் பிரதமர் யோஷிஹைட் சுகா மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்தக் காரணங்களால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது. சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் பிரதமர்...
உலகம்

சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி – தாலிபான் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் கூறியதாவது, "சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன....
1 21 22 23 24 25 42
Page 23 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!