இந்தியா

இந்தியாசெய்திகள்

அமைச்சரவை அமைவதில் தொடரும் இழுபறி: புதுச்சேரியில் என்.ஆர்.காங். – பாஜக இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதி

புதுச்சேரியில் புதிய அரசின் அமைச்சரவை உருவாவதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு எட்டப்படாததால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. 'அமைச்சரவைப் பற்றி அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை' என பாஜக முடிவு எடுத்துள்ளது. 'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்று என்.ஆர்.காங்கிரஸ் அறிவித் துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஒரு மாதம் ஆன நிலையில், முதல்வராக ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக துணை முதல்வர் உள்ளிட்ட 3...
இந்தியாசெய்திகள்

லட்சத்தீவு வரைவு சட்டங்கள்; மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்: அமித் ஷா

லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத் தீவு நிர்வாகி பிரபுல் படேல் லட்சத்தீவு மேம்பாடு மற்றும் சமூக விரோத செயல்களுக்கு தடை விதிப்பது தொடர்பான இரு வரைவு சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு...
இந்தியாசெய்திகள்

“இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை கூடாது” : உச்சநீதிமன்றம் அதிரடி!!

ஆந்திராவில் இரண்டு தனியார் டிவி சேனல்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை, அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ரகுராம கிருஷ்ணம் ராஜூ தொடர்ந்து விமர்சித்து வந்தார். கொரோனா சூழலை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முறையாக கையாளவில்லை என அவர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து அவர் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது...
இந்தியாசெய்திகள்

கேரளா: தாமதமாகும் தென்மேற்கு பருவமழை… ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டிய பருவமழை தொடங்கும் என முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மழை பொழிவு கொண்ட தென்மேற்கு பருவமழை, ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே மழை தொடங்க வாய்ப்பில்லை...
இந்தியாசெய்திகள்

மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரும் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் மனுதாரர், அரசு தரப்பில் வாதங்கள் மு டிந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திருபாய் நிரன்பாய் படேல் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர். கடந்த ஆண்டு...
இந்தியா

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மே.வங்கம்! மோடியைக் காக்க வைத்த மம்தா

மேற்குவங்கம் மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளைப் பிரதமர் மோடி ஆய்வு செய்த பின், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தபின் மேற்குவங்கம் சென்ற பிரதமரை முறைப்படி, மம்தா பானர்ஜி வரவேற்கச் செல்லவில்லை. ஆளுநர் ஜப்தீப் தங்கர் மட்டுமே விமான நிலையத்திற்குச் சென்று பிரதமரை வரவேற்றார். அதன்பின், மேற்குவங்கத்தில் ஏற்பட்ட புயல் சேதங்கள் குறித்து பிரதமர் ஆய்வு...
இந்தியா

அச்சத்தை உருவாக்கும் ராகுல் காந்தி பேச்சு; டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

டூல்கிட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் பின்னணியில் இருக்கிறது எனும் உண்மை தெரிந்துவிட்டதால், ராகுல் காந்தியின் பேச்சு மக்களிடையே அச்சத்தை உண்டாக்குவதாக அமைந்துள்ளது. 2021, டிசம்பர் மாதத்துக்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாகப் பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசின் தடுப்பூசித் திட்டம் குறித்தும், பிரதமர் மோடியின் திட்டமிடல் இல்லாத செயல்...
இந்தியாசெய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை முதல் டெல்லி அரசு தளர்த்த உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். செய்தியளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறுகையில், ' டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை...
இந்தியாசெய்திகள்

சொந்த தேவை இருந்த போதும் இந்தியா 123 நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

இந்தியாவுக்கு தடுப்பூசி தேவைகள் இருந்தபோதிலும் 123 நாடுகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் மக்கள் கடைபிடித்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதே தற்பொழுது கொரோனாவிற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே...
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேருக்கு தொற்று உறுதி..! 3,847 பேர் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,11,298 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 3,847 ஆகவும் பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,69,093 ஆக அதிகரித்துள்ளது. கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 21 தேதி முதல் 3 லட்சத்தை கடந்து வந்த தொற்று எண்ணிக்கை 3 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,73,69,093...
1 71 72 73 74 75 82
Page 73 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!